பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

1337

அனைவருக்கும் வெறுப்பே ஏற்பட்டதாயினும் சிரானும் டெமெட்ரியஸும் தன் சூழ்ச்சியின் முடிவையே பெரிதாய் எண்ணி வாளா இருந்தனர். ஆனால், பஸ்ஸியானஸும், லவீனியாவும் அவளை வைது அரசனிடமே அவள் பொய் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறிவிடுவதாக அச்சுறுத்தினர். அத்துடன் அவர்களனைவரும் ஒன்று சேர்ந்து பஸ்ஸியானஸ் மீது பாய்ந்து அவனைக் கொலை செய்து பக்கத்திலிருந்த புலித்தூறொன்றில் தள்ளினர். அதன்பின் முன் திட்டப்படுத்தியபடியே டமோரா முன்னாலேயே அவள் மக்களிருவரும் லவீனியாவை வலிந்திழுத்துச் சென்றனர். தன்னை விடுவியா விடினும் கொன்றாவது போடும்படி டமோராவை அவள் கெஞ்சிக் கூத்தாடியும் பயனில்லாது போயிற்று. அவள் அவர்களின் அரக்கப்பிடிக்கு இரையாகிய பின் அவர்கள் இரக்கமின்றி அவள் நாவை அறுத்துப் பின் பிறர்க்கு அச்செய்தியை எழுதியும் தெரியாவண்ணம் அவள் இருகைகளையும் வெட்டிவிட்டனர். அவளும் உணர்ச்சியிழந்து ஒரு பாறையில் கிடந்துருண்டாள். அந்நிலையிலேயே அவள் விலங்குகளுக்கு இரையாயிருக்கக் கூடும். அவள் விரும்பியதும் அதுவே. உயிரினும் அரிய பெண்மையிழந்தும் உயிர் வாழவோ மாந்தர் கண்களில் படவோ அவள் விரும்பவில்லை. ஆயினும், மானம் பின் தள்ளப் பழியுணர் ணர்ச்சி முன்தள்ள மெல்ல எழுந்து நடக்கலுற்ற அவளை அவ்வழி வந்த மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ் கண்ணுற்ற அவள் நிலைமையைப் படிப்படியாயுணர்ந்து அழலாயுருகி அவளை டைட்டஸிடம் இட்டுச் சென்றான்.

இதற்குள் இன்னொரு புறம் டைட் னாரு புறம் டைட்டஸின் மக்களான 'குவின்டஸையும் 2மார்ட்டியஸையும் ஏரான் வேட்டுவரை எல்லாம் ஏமாற்றிக் காயத்துடன் ஒளிந்திருக்கும் ஒரு புலியைக் காட்டுவதாகக் கூறி அழைத்து வந்து பஸ்ஸியினாஸ் விழுந்து கிடக்கும் குழியண்டை கொணர்ந்தான். அப்போது அரையிருட் டாகையால் அவ்வடர்ந்த புதர்களுக்கிடையில், ஏரான் நழுவிவிட்டான். மார்ட்டியஸ் புதர்மூடிய அக்குழியில் சறுக்கி விழுந்து அங்கே புலிக்கு மாறாகத் தன் அரிய மைத்துனனே காயமுற்று விழுந்து கிடப்பது கண்டு அங்கம் பதைத்தான். அதன்பின் வெளியேற வழியெதுவு மில்லாதிருப்பது கண்டு

1