பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

341

வருவான். நம் ஆட்களால் அனைவரையும் போரின்றிச் சூழ்ச்சியாலேயே கொன்று விடலாம்," என்றெண்ணினாள். டைட்டஸ் அவள் கூறியபடியே தன் மகனாகிய லூஸியஸை அழைத்ததுடன் ஸாட்டர்னினஸையும் டமோராவையும் கூடவந்து விருந்துண்ணும்படி அழைத்தான். ஆனால், விருந்தில் உணவுக்கு மாறாக டமோராவின் பிள்ளைகளே கறியாக சமைக்கப்பட்டிருந்தனர். உண்டியருந்திய பின் டைட்டஸ் தன் மகளை அவள் முன் நிறுத்தி அனைவரும் அறிய அவள் பழியை எடுத்துக்கூறியபின், “அவளுக்கு இவ்வகை இன்னல் செய்தவர் அழிந்தனர். அவள் பழியும் இத்துடன் ஒழியட்டும்.”என்று அவள் குறையுடலைத் தன் கையாலேயே வெட்டி வீழ்த்தி அவள் துயருக்கு ஒரு முடிவு தந்தான். பின் டமோராவை நோக்கி, "இறந்த உன் மைந்தர் நிலைமை என்ன என்று அறிய விரும்புகிறாயா? அவர்கள் வேறெங்கும் இல்லை. ல்லை. உன் வயிற்றிலேயே சென்று விட்டனர்! கொடியோய்! நீ தின்றது உன் குழந்தைகள் இறைச்சியையே என்றறி; இதுவே என் பழி," என்றான். அவள் திகைத்து நிற்குமளவில் லூஸியஸ் ஏரானை முன் நிறுத்தி அவள் செயல்களை வெளிப் படுத்தினான். தன் அவமதிப்பைப் பொறாது டமோரா எழுந்தோடத் தலைப்படு மளவில் டைட்டஸ் அவளைக் குத்தக்கொன்றான்.

66

ஸாட்டர்னினஸ் வெகுண்டு டைட்டஸைக் கொன்றான். உடனே லூஸியஸ் தந்தையுயிரை வாங்கிய அதே வாளால் ஸாட்டர்னினஸின் உயிரை மாய்த்தான். ரோம் மக்கள் இக்கொலைகளையெல்லாம் கண்டு, "இஃது என்ன? இறைவன் சீற்றமோ?" என்று அஞ்சி நடுநடுங்கினர். லூஸியஸ் அவர்களிடையே வந்து வணங்கி நின்று தன் குடியினர் அடைந்த பழிகளையும் டமோராவின் தீச்செயல்களையும் எடுத்துரைத்தான். ரோம் மக்கள், 'லூஸியஸ் வாழ்க! லூஸியஸே எங்கள் பேரரசராகுக!” என்று ஆர்ப்பரித்தனர். முன் ை ட்டஸை முடிசூட்ட எண்ணியிருந்த மார்க்கஸ் அன்ட்ரானிக்கஸ் அவன் மீந்த ஒரே பிள்ளையாகிய ய லூஸியஸுக்கு முடி சூட்டினான். காத்தியரும் லூஸியஸின் வீரத்தை மதித்து அவனுக்குப் புகழ் மாலைகள் சூட்டி நட்புணர்ச்சியுடன் தம் நாடு சென்றனர். டைட்டஸின் பெருந்துயர் மிக்க பெருமித வாழ்வு ரோம் மக்களால்