பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

177

ஆனால் பாரத வீரன் அசையவில்லை. கணங்களை அவனும் எண்ணினான். சிங்கம் வெளிவருவதை அவன் கண்கள் மை கொட்டாது எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. ஓங்கிய கையின் நாடி நரம்புகள் ஓங்கிய ஈட்டியை வீசக் காத்து நின்றன.

கணங்கள் ஒன்று, இரண்டு சென்றன. சிங்கத்தின் மீசைகள் வாயிலுக்கு வெளியே தெரிந்தன. அது பிடறி மயிரைக் குலுக்கிற்று. சற்றுப் பதுங்கிப் பின்வாங்கிற்று. பாய்வதற்கான பதுங்கலே அது என்று பாரத வீரன் கருதினான். ஈட்டியை முன்னோக்கிப் பாய்ச்சுவதற்காக, அவன் உடல் சற்றுப் பின்னோக்கிச் சாய்ந்தது. கைகளும் சற்றுப் பின்னோக்கின.

ஆனால் சிங்கம் பாயவில்லை. அது அப்படியே ஐந்து கணநேரம் நின்றது. அவனையே உறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றது.

கணங்கள் உருண்டோடின. சிங்கம் பாய்ந்தபாடில்லை. பாரத வீரன்தான் சிங்கத்தை விழுங்கப்போகும் சிங்கம் போல நின்றான்!

வளையிலுள்ள எலி வெளிவருவதை எதிர்பார்த்து நிற்கும் பூனைகூட, அவ்வளவு ஆர்வத்துடன் நின்றிராது!

சிங்கத்தை நோக்கி அவன் ஆர்ப்பாட்டம் செய்தான்.“வீரச் சிங்கமே! வா, வெளியே! உன் கோரப்பற்களையும் கொடு நகங்களையும் இப்படிக் கொண்டுவா!” என்று கூவினான்.

சிங்கம் பாரதவீரன் குதிரை முகத்தை ஏற இறங்கப் பார்த்தது. பின் ஒன்றிரண்டு தடவை உறுமிற்று. ஒரு தடவை அது முழங்கி எக்காளமிட்டது. பக்கத்து ஊர்களிலுள்ள மக்களெல்லாம் அதைக் கேட்டுப் பொறி கலங்கியிருந்தனர். அது இனிப் பாய்ந்துவிடும் என்று பாரதவீரன் எதிர்பார்த்தான்.

அது அப்போதும் பாயவில்லை. அது வாலைச் சுழற்றிற்று. தலையை ஆட்டிற்று. ஒன்றிரண்டு தடவை கொட்டாவி இட்டது. நெற்றியை முன் கால்களால் இரண்டு மூன்று தடவை தடவிற்று. இறுதியில் அது தலையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டது. சுருண்டு மடங்கி, பின்னோக்கிப்

கூண்டுக்குள்ளேயே

படுத்துக்கொண்டது.