கட்டுரை முத்தாரம்
89
முரசறைவதனுடன் நில்லாமல் நான் மன்னன் சாலமன் மாண்புகளை விளக்கத் தொடங்கினேன். கோமாளியின் நகைத் திறமற்ற கூற்றுக்களுக்கு நகைத் திறமான விளக்கம் கூறத் தொடங்கிக் கோமாளியாகவே ஆய்விட்டேன். என் அடக்க முடியா நகைத்திறம் எனக்கு வாழ்வும் பேறும் தந்தது - வாழ்க்கை உயர்வைத் தடுத்தது.
இப்போதும் நண்பன் நடிப்பார்வம் அவன் நகைத் திறத்தை மறைத்தது.
அவர்: "முரசில் நான் எல்லாவகைப் பயிற்சியும் பெற் றிருந்தேன். போர் அணி, படை அணி முரசு முழக்கங்கள் எனக்குப் பாடமாயிருந்தன. சிலகாலம் போருக்குக் கூடச் சென்றிருந்தேன். ஆனால், முரசொலியினுக்குரிய இசையீடுபாடு எனக்கு இல்லாமற் போயிற்று. தான் சுவைக்காத தொழிலில் பிறருக்குச் சுவையூட்டமுடியாதென்று கண்டேன். போருக்குப் பிறரைத் தூண்டுவதை விட, நகைத்திறந் தூண்டுவதுதான் எனக்குப் பிடித்தது. ஆகவே பழைய கோமாளித்துறையை நாடினேன்.
“மேலும் தொழில் கோமாளித் தொழிலானாலும், படைத்தொழிலானாலும், என் குருதியே முரசுக்குடிமரபில் வந்ததல்லவா? இந்தக் குடிமரபுப் பண்புடையவன் அது இல்லாத வரிடம் வணங்கி ஒடுக்கி எப்படி நடக்க முடியும்? படைத்துறைக்கு முழுக்குப் போட எண்ணி விலகிக் கொள்ள மனுப்போட்டேன். நான் நெட்டையாகவும் உடல் வலுவுடையவனாகவும் இருந்த தால், மேலாட்கள் என்னை எளிதில் விலக்கிவிட விரும்ப வில்லை. பணம் கொடுத்துத்தான் விடுதலைபெற வேண்டுமென்று அறிந்து கொண்டேன். இச்சமயம் என் தந்தை உயிருடன் இருந்தார். அவருக்கு என் துயரங்களை ஒப்பித்து, அவர் மனத்தைக் கரையாதவண்ணம் கரைக்க முயன்று, காவிய முறையில் கடிதங்கள் எழுதினேன். ஆனால், காவியம் அவரைக் கரைக்கவில்லை. காவியத்தினும் சிறந்த குடி இச்சமயம் அன்பர் தேநீர்க் கோப்பைக்கு ஒரு வணக்கம் செலுத்தினார். அவர் மரபில் ஊறியிருந்தது. குடிக்கும் மரபு பிறர் விடுதலைக்குக் காசு கொடுக்கும் மரபாக இருக்க முடியுமா? அவர் கடிதங்களுக்கு மறுமொழியே தராது போய் விட்டார். அதன்பின் எனக்கிருந்த ஒரே வழி சட்டத்தை இருகையிலும் பற்றிக்கொண்டு ஓடிவிடுவது தான் அதைத்தான் நான் செய்தேன்.