பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

||-

அப்பாத்துரையம் - 42

பெண்கள் வெறும் ஆடவர் பெண்கள்தான் - யாருக்கும் பேர் கிடையாது.

ஆயினும் கிரீன்லந்துப் பெருங்குகையில் எங்கிருந்தோ வந்து சந்தித்த ஓரிளைஞனும் ஒரு மங்கையும் தம் அழகாலும் காதல் நிறைவாலும் பெற்ற தனித்தன்மையைக் குறிக்க அந் நாட்டினர் அவர்களுக்கு முதல் முதலில் பெயரிட்டழைத்தனர் - ‘அனிங்கைத்’ அல்லது இளஞாயிறு என்றும் 'அஜத்' அல்லது இளம்பிறை என்றும் பெயர் வைத்தார்கள். வானகத்து இளஞாயிறும் இளம் பிறையுமே தம் மனித இன முன்னோர்கள் என்று கொண்டவர்கள் கிரீன்லந்து மக்கள். அம்முன்னோர் களின் முழுப்பொலிவுக் கூறுகளையும் உடைய இக்காதலரையும் அவர்கள் அப்பெயர்களால் அழைத்திருக்கக்கூடும்; அல்லது அவர்கள் புற அழகும் அக அழகும் தோன்ற அப்பெயர் மக்கள் உள்ளத்தில் எழுந்திருக்கக்கூடும்.

அனிங்கைத் ஒரு வேடன்; துடி துடிக்கும் இளமைப் பருவத்தினன்; அவன் குறும்புக்குப் பேர்போனவன்; பெண் களை மதிப்பதில்லை; பெண்கள் பக்கமாக அவன் கண் நாடுவது கூட இல்லை. அஜத்தின் அழகுபற்றிப் பல தடவை அவன் கேள்விப்பட்டான்; அவன் பொருட்படுத்தியது கிடையாது. கடுங்குளிர் மாதம் இப்படியே சென்றிருந்தால், பொருட் படுத்தவும் நேராது. இக் காதல் கதையும் நிகழ்ந்திராது. ஆனால், அனிங்கைத்துடன் தங்கிய குழு அஜத்தையும் அவள் குழுவையும் அழைத்து விருந்தாடிற்று. சிலபல தடவைகள் விருந்தில் அனிங்கைத் அஜத்தைக் கண்டான். முதல் தடவையே அவன் ஆணவச் செருக்கு முனைமுறிந்தது. அவன் அவள் பக்கம் நாடினான். அவளுக்குச் சிறு பணிகள் செய்ய முனைந்தான். ஆனால், இத்தகைய சிறுபணியை அவள் ஏற்க மறுத்தாள்.

அனிங்கைத் தன் சார்பில் அவளையும் அவள் குழுவை யும் வரவழைத்து, ஒரு திமிங்கிலத்தின் வாலைக் கொணர்ந்து விருந்தளித்தான். வாலின் மென்பகுதி அஜத்தின் முன் வைக்கப் பட்டது. இப்போதும் அஜத் முகத்தில் மகிழ்ச்சிக் குறியில்லை. ஆயினும் அந்நாள்முதல் அவள் வெண்மான்தோல் உடுத்தன்றி வெளிவராததை அவள் தோழர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர். கை நகத்திலும் புருவத்திலும் அவள் தீட்டிவந்த கரிய மை நாள்