பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரை முத்தாரம்

99

கையைப்பிடித்து என்னுடன் வா. நான் உன் வாழ்க்கைத் துணையாயிருந்து உன்னை என் உயிர் போல்பேணுகிறேன்,” என்று அன்பழைப்பு அழைத்தான். அவள் மறுத்தாள். “வானத்து மதியமே, மறுக்காதே. நீரில் தோன்றும் நிமிர்ந்த ஞாயிற் றொளியே, என் வேண்டுகோளுக்கு இணங்கு,” என்று அவன் கெஞ்சிப் பார்த்தான். அவள் நகைத்தாள். “மீட்டும் நாம் சந்திப்போம். ஓரேயடியாகப் பிரியமாட்டோம்; போய்வா,” என்றாள்.

ளங்கன்னியே, காளை அச்சமறியாது என்பர். நீயோ கன்னி. நான் திரும்புவது உறுதி. ஆனால், திரும்பும் வழியில் திடீர்ப்பனிமலை குறுக்கிட்டுத் தடுத்துவிடலாம்; உன்னை நாடி இராப்போது முழுவதும் வேறு குகைகளில் வாழ நேரலாம். நம் இளமைக் காலத்தில் எத்தனை இரவுகள் (ஆறுமாதக் காலங்கள்) இருக்க முடியும். இருவரும் ஒரே குகையில் வந்து சேருவதென்பது எப்படி அடிக்கடி நேரும்? ஆகவே எண்ணிப்பார். ஒருங்கு திரிவோம். ஒரு குகையில் கூடுவோம்,” என்று அவன் மீட்டும் மீட்டும் இறைஞ்சினான். "இரவும் பகலும் மாறி மாறிச் சிறிது சிறிது நேரம் இருக்கும் என்று சில கவிஞர் புனைந்து கூறுகிறார்களே, அந்த உலகிலா நாம் இருக்கிறோம். அணங்கு களை அகத்தில் இருக்கவிட்டு அடிக்கடி வந்து கலக்க. நம் உலக வாழ்வு புயல் வாழ்வு. அணங்குகள் புயலின் மின்னல்கள் புயலுடன் கூடியிருக்கும் மின்னலாக என்னுடன் இருந்துவாழ வருவாய்!" என்று அவன் கட்டுரைத்தான்.

அவன் காதல்கனிவு, அவன் கவிதை, அவன் வேண்டு கோள் யாவும் அவளுக்குப் பெருமை தந்தன. அவள் இதழில் புன்னகை அரும்பிற்று. ஆனால், அவள் உள்ளத்தின் ஆழத்தி லிருந்து பெண்மையின் பேதைமை, அழகின் செருக்கு அசைய மறுத்தது.

அவள் அவனுடன் போக மறுத்தாள். ஆனால், அவன் அவளுடன் தங்கத் துணிந்தான். அவள் வேட்டையாடத் தேவை யில்லாதபடி அவன் தொலைதூரம் சென்று வேட்டையாடினான். அவள் தேய்ந்து சிறுத்த குகையிலேயே தங்கினாள்.