பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17. கவிஞர்களுடன் என் முதற்சந்திப்பு வில்லியம் ஹாஃச்லிட்'

1798, என்னால் என்றும் மறக்கமுடியாத ஆண்டு. பாதி வானவர் உருவின் கவர்ச்சி, பாதி விலங்குருவின் மருட்சியுடன் அந்த எண்ணுக்குரிய இலக்கங்கள் என்மனத் திரைமுன் உலவுகின்றன. என் தந்தை அப்போது ஷ்ராப்ஷயர் வட்டத் திலுள்ள வென் நகரில் மறுப்புச் சமயத்தாரின் சமய முதல்வரா யிருந்தார். அவருடனிருந்து, திருக்கூட்டத் தலைமைப் பணி யாற்றியவர் திரு. ரோ. திருக்கூட்டத் தலைமைப் பணியிலிருந்து திரு. ரோ. விலகி ஓய்வு கொண்டதனால், அவரிடத்திலிருந்து பணியாற்ற திரு. காலரிட்ஜ் எங்கள் வட்டாரத்தில் எதிர்பார்க்கப் பட்டார். அவர் முதமுதல் திருக் கூட்டத்தில் பேசவிருந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தியநாள் மாலையே, அவர் வருகை எதிர்பார்க்கப்பட்டது.வரவேற்பில் குறை ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடனும் அவரைக் காணும் அவா ஆர்வத்துடனும் நாங்கள் சென்றோம். தம் பின் தம் இடத்தில் பணியாற்ற வருபவரைச் சந்தித்து வரவேற்கும் முறையில் திரு. ரோவும் எங்களுடன் இருந்தார்.

வண்டி நிலையத்தில் நாங்கள் சென்று காத்திருந்தோம். வண்டியும் வந்தது. பலர் இறங்கி வந்தனர். நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இலக்கணங்களமைந்த எவரையும் காணாது விழித்தோம். அவ் விலக்கணங்களுக்குப் பெரிதும் மாறான ஒருவர்தான் எங்கள் கண்ணையும் கருத்தையும் தானே கவர்ந்ததுடன், யாரையும் எதிர்பாராமலே எங்களிடம் பேசி, எங்களிடம் தம்மையும் தம் பண்புகளையும் ஒரே மூச்சில் அறிமுகம் செய்து வைத்தார். அச் சந்திப்பை நான் என்றும் மறக்க முடியாது.