(114
II-
அப்பாத்துரையம் - 42
திரு. காலரிட்ஜ் வழக்கத்துக்கு அப்பாற்பட்ட பருத்த உடலும் சிறிய வட்ட முகமும் உடையவராயிருந்தார். அவர் சட்டை கறுப்பு நிறம். அது அவருக்காகத் தைத்ததாகக் காணப் படவில்லை. அவர் பெருத்த உருவத்தை அது தன்னுள் அடக்க முடியாமல் திணறிற்று. அத்துடன் அது கட்டையாகவும் இருந்த தால் ஒரு வேட்டைக்காரன் சட்டைபோலவே இருந்தது. உடையும் தோற்றமும் இங்ஙனம் பொருத்தமற்றதாகத் தோற்றி னாலும், அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. கூடவந்தவர்கள் எல்லாருடனும் அவர் தனித்தனி யாகவும் கூட்டாகவும் பிரிவு பிரிவாகவும் கலகலப்பாகப் பேசிக்கொண்டேதான் வந்தார். கால் நடந்ததோ இல்லையோ, வண்டியிலிருந்து இறங்கினாரோ இல்லையோ, ஓயாது அவர் கடகடவென்று பேசிக்கொண்டு தானிருந்தார். பேச்சும் என்ன பேச்சு! எங்கிருந்தாவது எதையாவது இழுத்து உவமையழகு, நகைச்சுவை, வீரச்சுவை ஆகிய எல்லாச் சுவைகளும் கலந்து அளந்து கொட்டிக் கொண்டேதானிருந்தார்.
ம்
கூடவந்தவர்களுடன் பேசிய பேச்சு நிற்கவேயில்லை. கண்கள் எங்களைப் பார்த்தன. அவ்வளவுதான். அவர்களிடம் பேசிய பேச்சே தொடர்ந்து எங்களிடம் பேசிய பேச்சாயிற்று. ஆயினும் பேச்சுடன் பேச்சாகவே தன்னையும் தன் பணியையும், எங்களைக் கண்டதனாலுண்டாகும் மகிழ்ச்சியையும், இன்னும் இவற்றுடன் இணைத்து எத்தனையோ பெரிய சிறிய செய்திகளையும் எடுத்துப் பொழிந்து கொண்டே வந்தார். அவர் பேச்சுக்கிடையே வேறு யாருக்கும் எந்தப் பேச்சுக்கும் இடம் கிடையாது. எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்! அவர் பேச்சுக்கு முடிவு அவரைவிட்டு சென்றுவிடுவது தான். ஆள் மாறும்; பழைய ஆள் போகும்; புது ஆள் வரும்; ஆனால்,பேச்சுத்தொடரும். ஆளில்லாவிட்டால் கூட அவர் வாய்தான் ஓயும். உள்ளம் ஓயாது ஓடிக் கொண்டேயிருக்கும்.
ஏனெனில், அவர் ஒரு கவிஞர். கவிஞர் மட்டுமல்ல, அறிஞர்; அறிஞர் மட்டுமல்ல, சொற்பொழிவாளர். சமயத்தில் கூட, மறுப்புச் சமயக் கொள்கையில்கூட, அவருக்கு அக்கறை ருந்திருக்க வேண்டும்; ஏனெனில் அந்தச் சார்பிலேதான் அவர் திரு. ரோவின் பணியிடத்துக்கு உரியவராக வந்திருந்தார்.
உ