அப்பாத்துரையம் - 42
164 ||- மிகுதி வருமானமுள்ள பொறித்தொழிலாளர், கலைத் தொழிலாளர், சுரங்கத் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர் ஆகியவர் பெரு வெற்றிக்கு வழிகாட்டியாய் அமைந்தது. அறநிலையமாகத் தொடங்கப்பட்ட முயற்சி, முதல்தரத் தொழில் நிலையமாகத் தழைத்தோங்கி உலகெங்கும் பரந்தது. 1817இல் இதனை விரிவுபடுத்தித் தேசமுழுதும் பரப்புவதற்கான சட்டம் பிரிட்டிஷ் அரசியல்மன்றில் நிறைவேற்றப்பட்டது.
சேமவைப்பகங்களின் பயனிறைவையும் இடர்காப்பையும் பெருக்கி அதைப் பரப்பும் வகையில் நாகரிக நாடுகளெங்கும் எத்தனையோ நல்ல நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பலதரப்பட்ட மக்கள் வகுப்பினரும் அதனைப் பயன்படுத்திப் பெருக்கி வருகின்றனர். அதில் தொழிலாளர்களுள்ளும் மிகப்பலர் பங்குகொண்டே வருகிறார்கள். ஆயினும் தொழிலாளர் வருமானத்தில் அவர்கள் மீத்துவைக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்ட பொருளில் ஒரு சின்னஞ் சிறு கூறே இன்றும் சேமவைப்பகம் சேர்கிறது. சேமவைப்பகம் மற்ற வகுப்பினரைக் காட்டிலும் தொழிலாளருக்கே பெரும் பயன்தருவது. தொழிலாளர் வகுப்பையே அதன் தனிப்பட்ட வகுப்புத்தரத்திலிருந்து அது உயர்த்திவிட வல்லது. ஆயினும் சேமவைப்பகத்தைப் பயன்படுத்துவதில் மற்ற வகுப்பினர்கள்தாம் முந்துகின்றனர். தொழிலாளர்கள் உலகெங்குமே பிந்தித்தான் நிற்கின்றனர் என்று கூறாமலிருக்கமுடியவில்லை. இதற்குப் பொதுவாக அவர்கள் கல்வியின்மையே காரணம் என்னலாம். அத்துடன், கல்வியில் இன்று, சேமவைப்பகம் பற்றிய விளக்கப் பகுதிகள் இடம்பெற வில்லை. சேமிப்புப் பண்பைக் கெடுக்கும் பல தீய பழக்கவழக்கங்கள் நிலவுவதுடன், அவற்றுக்கு மறைமுகமாகப் பிறவகுப்பினர் ஆதரவு நேருகிறது. தொழிலாளரைக் கைதூக்கி விடப் பாடுபடுவதாகக் கூறுபவர்கூட அவர்கள் வருவாயை உயர்த்துவதில் அவர்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி, அவர்கள் வாழ்க்கை உயர்வுக்கு அதைவிட முக்கியமான துறைகளில் அவர்கள் சிந்தனையை ஓடவிடாமல் செய்கிறார்கள்.
தொழிலாளிகளில் மிகக் குறைந்த ஊதியம்பெறும் உழைப்பாளிகள் மீத்துவைப்பதில் பின்னடைந்தால் அது ஓரளவு இயல்பு என்னலாம். ஆனால் உண்மையில் மீத்து வைப்பதில் பின்