168) ||-
அப்பாத்துரையம் - 42
தூண்டுவதாய் அமைந்துள்ளது. போரினால் விளையும் அழிவு களைக்கூட இந் நலங்களே நம் கண்ணிலிருந்து மறைத்து வருகின்றன. ஆனால், இயந்திர முதலாளித் துவம் தரும் மாயப்பயிற்சி மக்கள் உடலுக்கும் பயிற்சியில்லாமல், அவர்கள் அறிவுக்கும் பயிற்சியில்லாமல் விட்டுவிடுகிறது. அவர்கள் நல்லின்பங்களை நாடாமல், புல்லின்பங்களை நாடுவதற்கும்; நல்வாழ்வு நாடாமல், துன்பத்தை மறைக்கும் போலி இன்பங்களை நாடுவதற்கும் காரணம், இயற்கை உடல் உளப்பயிற்சியிலிருந்து அகற்றப்பட்டு அவர்கள் சிறைப்பட்டுக் கிடப்பதேயாகும்.
இயந்திரத் தொழிலின் பெருமை அதன் கூட்டமைதியும், அதன் சிறப்புத் தொழில் 'பயிற்சியும்தான் என்று கூறுவதுண்டு. து சரியே. ஒவ்வொருவனும் ஒரு முழு மணிப்பொறியை ஆக்குவதில்லை. ஆனால், ஒவ்வொருவனும் கருவி மூலம் ஓர் உறுப்பைப் பேரளவில் விரைவுடனும் திறமுடனும் செய்து குவிக்கிறான். மொத்தத்தில் தொழில் சிக்கனம் ஏற்படுகிறது. ஆனால், இயந்திரச்சாலையின் இக் கூட்டமைதியை வியந்து பாராட்டுபவர், மனித சமூகத்தின் கூட்டமைதியை மறந்து விடுகின்றனர். மேலும் இயந்திரத்தின் ஒவ்வோர் உறுப்பும் ஒரு இயந்திரமாகாது. மனித சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பும், அதன் கடைசிச் சிற்றுறுப்பாகிய தனிமனிதனும் மனிதனே யாவான். இயந்திரத் தொழிலில் முன்னேறிய சமுதாயத்தில் இவ்வுண்மை மறக்கப்படுகிறது. அது தொழிலாளியை, ஒரு தொழிலாளியாகப் பயிற்றுவிக்கிறது. ஒரு மனிதனாகப் பயிற்றுவிக்க வில்லை. முதலாளியை, முதலாளியாகப் பயிற்றுவிக் கிறது. அவனையும் ஒரு மனிதனாகப் பயிற்றுவிக்கத் தவறி விட்டது. ஓரளவு மனிதத்தன்மை இவ்விரு கோடிகளுக்கும் இடைப்பட்ட நடுத்தர வகுப்பினரிடம் மட்டுமே தங்கி விடுகிறது. சமுதாயத்தின் கையும் காலுமான தொழிலாளிகள் சிறுக்க, வயிறாகிய முதலாளிகள் பெருக்க, மூளையும் நெஞ்சகமுமான நடுத்தர வகுப்பினர் மட்டுமே சிறுக்கவும் பெருக்கவும் செய்யாமல், நன்னிலையில் வாழ முடிகிறது. இன்று சேமிப்பின் பயனைப் பெறுபவர்களும், உணர்பவர்களும் இவர்களே.
இன்றைய நடுதத்தர வகுப்பே கல்வி, கலை, கலைத்தொழில், அறிவுத்தொழில் ஆகியவற்றை இயக்கும் நாகரிக வகுப்பாய்