பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(178

அப்பாத்துரையம் - 42

பிணைக்கப் பட்ட தற்பற்றே பொதுநலம். பொதுநலப் பற்றால் ணைக்கப்பட்ட தற்பற்றே சமூக வாழ்வுக்கு உரிய சீரிய பண்புடைய தற்பற்று.

ஆங்கிலேயரிடம் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, கடுமையான உழைப்பாற்றல், தற்சார்பு ஆகிய குணங்கள் பெரும்பாலும் யல்பாகவே அமைந்துள்ளன. அவர்கள் தற்பற்றுடையவர்கள். ஆனால், அவர்கள் தற்பற்றுத் தன்னுடன் நிற்பதில்லை; குடும்பமளாவிக் குடும்பப் பற்றாகவும் இருக்கிறது. இதனால் அவர்கள் தற்பற்று இன்னும் உயர்வடைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. குடும்ப மதிப்புணர்ச்சியே அவர்களைத் தற்சார்புடையவர்களாக்குகிறது. பிறரைச் சார்ந்து வாழவோ, பிறருக்கு அடிமைப்பட்டு வாழவோ, பிறர் தயவை, இரக்கத்தை எதிர்பார்த்து அல்லது பயன்படுத்தி வாழவோ ஒருப்படும் எந்த மனிதனையும் ஆங்கில இனத்தில் எளிதில் காணமுடியாது. ஆயினும், இச்சீரிய நற்பண்புகளுக்கு ஓர் எல்லை உண்டு.குடும்பப் பற்றுக்கு அப்பாற்பட்ட சமூகப் பண்பு அவர்களிடையே அரிதாயிருக்கிறது. அவன் பிறரைச் சார்வதில்லை, பிறரை அடிமைப்படுத்து வதில்லை; பிறர் தயவை எதிர்பார்ப்பதில்லை. தன் குடும்பப் பொறுப்பைப் புறக்கணித்து, குடும்பத்தினரைப் பிறர் பேணும்படி விட்டு விடுவதில்லை. அதேசமயம் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் கடந்து சிந்திப்பது கிடையாது. தன் பண்புடையவர்களைத் தவிர வேறு எவரையும் மதிப்பதுமில்லை. இதனால் தற்சார்பு அற்றவரைத் தாங்கி உயர்த்த அவன் முனைவதில்லை. அடிமைப்படுபவரை அடிமைப்படுத்தவும் அவன் தயங்குவதில்லை. அடிமைப்படுபவர் அடிமைப்படுவது மட்டுந்தான் குற்றம்; அவர்களைத் தான் அடிமைப் படுத்துவது குற்றமில்லை என்று அவன் வாதிப்பான்; அல்லது உள்ளாரக் கருதுவான். தற்சார்பற்றவரைப்

புறக்கணிப்பதே இயல்பு என்று அவன் கருதுவான்.

ஆங்கிலேயரளவு தற்பண்புகூட, அஃதாவது தற்பற்றுக் கடந்த குடும்பப்பற்றுக்கூட இன்னும் உலகில் மிக அரிய பண்பாகவே இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆகவே, குடும்பங் கடந்து சமூகத்தையே எட்டாத ஆங்கிலேயர் பண்பு, நாடு கடந்து உலகு செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆங்கிலேயர் அனைவரும் கிட்டத்தட்டக் கட்டுப்பாடாகக் குடும்பப் பண்பு