4
அப்பாத்துரையம் - 42
ஆய்விடமாட்டா. இவை போலவே உரையாடல்களெல்லாம் அகநக நட்பாடும் நட்புரையாடல்கள் ஆகமாட்டா. அகத்தே அன்பில்லாத இடத்தில் உரையாடல்கள் வெறும் சலசலப்புக்களே. “பெரிதே நகரம்; அதன் தனிமையும் பெரிது,” என்ற இலத்தீனப் பழமொழி இதனை ஓரளவு வலியுறுத்துகிறது. எப்படியெனில், பெரிய நகரத்தில் நண்பர் அகல அகலப் பிரிந்துறைகின்றனர். எனவே, அணுக்கப் பண்பாகிற தோழமை அங்கே தழைப்ப தில்லை. ஆனால், இந்நிலை நகரில் மட்டுமல்ல; நண்பர்கள் இல்லாத இடம் எதுவானாலும், அது முழுதும் தனிமையின் அவலத்திற்குரிய இடமே. நட்பிலா உலகம் ஒரு பாலைப்பரப்பே ஆகும்.
புற இடம்போல அக இடத்திலும் இத்தகைய பாலைப் பண்பு உண்டு. எவனொருவன் உள்ளமும் உள்ள உணர்ச்சி யும் நட்பின் தகுதிக்குப் புறம்பானதோ, அவனிடம் அது காரணமாகக் குடிகொண்ட தனிமையும் மனிதப் பண்பின் கூறன்று; விலங்குப் பண்பின் கூறே.
நட்பின் பயன் யாது? பலவகை உணர்ச்சிகளால் நம் நெஞ்சகம் புண்படுகிறது. அதில் பலவகைப் புடைப்பு, நலிவுகள் ஏற்படுகின்றன. நட்பு இவற்றை அகற்றி அதனை எப்போதும் சமநிலைக்குக் கொண்டுவர உதவுகிறது. உடலுக்கு மிகுதி இடர்தரும் நோய்த் திறங்கள் முறிவும் தவக்கமுமேயாகும். உளத்தின் வகையிலும் இடர்தரும் நோவுகள் இவையே. உடற்கூறறிந்தோர் கூற்றுப்படி, நுரையீரற்பையைத் துழாய்விதை நெகிழ்விக்கும்; உயிர்ப்பையைக் கந்தகப்பூ தளர்த்தும்; மூளைக்கட்டை நீர்நாயின் நெய் பண்படுத்தும். ஆனால், உள்ளத்தின் பூட்டிறுக்கத்தை உண்மை நட்பன்றி வேறு எதுவும் நெகிழ்விக்காது. துயரங்கள், இன்பங்கள், அச்சங்கள், அவாக்கள், ஐயப்பாடுகள், கருத்துக்கள் ஆகியவை உள்ளத்தை அழுத்தி இன்னல் விளைவிக்கின்றன. சமயத்துக்குப் புறம்பாக, இவற்றை அகற்றவல்ல ஒரு பழிதுடைப்பாய் இயங்குவது நட்பே.
நட்பின் இப் பயனை அறிந்து உலகின் மன்னரும் மண்ணாளும் மன்னரும் அதற்கு எத்தகைய மதிப்புத் தந்துள்ளனர் என்பது மிக வியப்புத் தருவதேயாகும். இத் தகையோர் தம் உயிர்ப் பாதுகாப்பு, தம் பெருமையின் பாதுகாப்பு