பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரை முத்தாரம்

7

அவன், “ஒன்று ஜூலியாவை என் மகனுக்கு மணம் செய்துகொடு. அல்லது என்னைக் கொன்று விட்டு அவள் மணம் பற்றிய பேச்சுப் பேசு. இவ்விரண்டு வழியன்றி உனக்கு மூன்றாவது வழி கிடையாது,” என்று மிகுந்த இறுமாப்புடன் கூறினான்... மற்றும் டைபீரியஸ் ஸீஸருக்கும் ஸெஜானஸுக்கும் உரிய நட்பினை ஒரு தெய்வீக நட்பு எனக்கொண்டு மன்றத்தார் அவர்கள் நட்பினுக்குச் சின்னமாக அவர்கள் சிலைகளை மன்றத்தில் ழுப்பினர். ஸெப்டிமஸ் ஸெவரஸுக்கும் பிளாட்டினஸுக்கு மிடையேயுள்ள நட்பு இதனினும் வியப்புக்குரியது. ஸெப்டிமஸ் தன் தலைப் புதல்வனை அழைத்து, பிளாட்டினஸின் புதல்வியை மணம்புரிந்து கொள்ளும்படி வற்புறுத்தினான். அத்துடன் தன் புதல்வன் மீது பிளாட்டினஸ் செய்யும் அவமதிப்பு முழுவதையும் அவன் உடனிருந்து ஆதரித்தான். மன்னன் தன் மன்றத்தாருக்கு வரைந்த முடங்கல் ஒன்றில், எனக்கு அவனிடம் உள்ள நட்பின் அளவை வேறுவகையில் என்னால் அளவிட்டுக் கூற முடியாது. அவன் என் வாழ்நாள் கடந்து வாழ்க என்பதே என் விருப்பம்,” என்று எழுதினானாம்!

66

மேற்கூறிய இம் மன்னர் பெருமக்கள் திராஜன் போலவோ, மார்க்கஸ் அரீலியஸ் போலவோ நல்லற வோர்களாக இருந்திருப்பார்களானால், இந்நட்புத் திறங்களை அவர்கள் அருள்திறத்தின் கூறுகள் என்று விளக்கி அமையலாம். ஆனால், அவர்கள் அறிவாற்றல் மட்டுமின்றிச் செயலாற்றலும், வீரவலிமையும், கண்டிப்பும் மிக்கவர்கள். அவர்கள் தன்மறுப்பாளர்கள் அல்லர்; செறிந்த தன்னல இறுமாப்புடையவர்கள். எனவே, இந் நட்புத் திறங்களால் அவர்கள் நாடியது தன்னல நிறைவே என்பது தெளிவு. அந்நிறைவை அவர்கள் பெருவிலை கொடுத்துப் பெற முடிந்தது. ஆயினும் அவர்கள் அதனைப் பெறத் துணிந்தனர்; உயிர்விடத் துணிந்தும் பெற முனைந்தனர். மன்னர் கோமான்களாகிய அவர்களுக்கு மனைவியர், மனக்கினிய மைந்தர், மற்றைய உறவினர் எண்ணற்றவர் இருந்தனர். ஆயினும், நட்பினால் பெறும் நிறைவை அவர்கள் எவர் உதவியாலும் பெறமுடியவில்லை.

காம்மினியஸ் என்பவர் தம் பணிமுதல்வரான உரங் கொண்டான் சார்லஸ் கோமகனைப் பற்றி ஓர் அரிய