வாழும் வகை
229
பெரியோர் பெருமை பணம் சார்ந்ததாயிராமல், அறிவு, கலை, சமூகப்பணி ஆகிய துறைகளைச் சேர்ந்தவையா யிருந்தால், அப் பெருமைகள் கடன் வாங்கும் ஆற்றலைத்தான் தருமேயன்றி, தீர்க்கும் ஆற்றலை வளர்க்காது. அவர்கள் கவலை வெளியில் தோன்றாமல் சிலபல நாள் இருக்கலாம். ஆனால், அது அவர்களை உள்ளூர அரித்துவிடும். அக் கவலைகளை அவர்கள் மறந்து, வாழலாம்; அல்லது அவற்றின் வகையில் அவர்கள் உள்ளம் மரத்துவிடலாம். ஆனால், அவை அவர்கள் வாழ்வை இன்ப மற்றதாக ஆக்காதிராது.
உலகம் கடன்படுவதற்கு எல்லா உதவியும் செய்கிறது. அது கடன்படுபவனை-பட்டவனை ஏழை என்று கூறி இரக்கம் காட்டுகிறது. கொடுத்த கடனைக் கேட்பவனை வன்கணாளன் என்று கருதி, கடன்தர முடியாதவன் பக்கமே ஒத்துணர்வும் இரக்கமும் கொள்கிறது. உழைத்து ஊதியம் பெறும் தொழிலாளி யைவிட, அல்லது ஊதியம் போதாது என்று போராடும் உழைப்பாளியைவிட, உழையாது இரக்க அடிப்படையில் இரக்கும் இரவலனிடம் அது மிகுதி பரிவும் ஆதரவும் காட்டுகிறது. அதே சமயம் இரப்பவனைவிடக் கடன் கொடுப்ப வனிடம் அது இன்னும் மதிப்பும் பரிவும் கொள்கிறது. வாங்கிய கடனைக் கொடுக்காதவனிடம் அது கொள்ளும் பரிவுக்கு எல்லையில்லை. திரும்பக் கொடுக்கமுடியாத கடனை ஏன் வாங்கினான் என்று அது கண்டிப்பதேயில்லை. ஏனென்றால், கடன்படுவதற்கான அடிப்படைக் காரணம், சமூகப் பசப்பு,பகட்டு வாழ்வுப் போட்டி; இவை சமூகத்தில் பெரும்பாலார் குறையாத லால், சமூகம் இதுவகையில் கண்டிப்பாயிருக்க முடிவ தில்லை. சமூகத்தைப் பின்பற்றி அரசியலும், அரசியலைப் பின்பற்றிச் சட்டங்களும் கடன்பட்டவர் பக்கமே இருக்கின்றன. ஆயினும் அது கடன்பட்டவர்களுக்கு முழுவிடுதலையும் தருவதில்லை-
துவே வியப்புக்கிடமான செய்தி! ஆனால், முழு விடுதலை கொடுத்தால் யார் மீண்டும் கடன் கொடுப்பார்கள்? முழு விடுதலை தராதது, கடன் கொடுப்பவர் பேரிலுள்ள பரிவினாலன்று: கடன் பழக்கத்தினைப் பேணவேண்டும் அவசியத்தினாலேயே யாகும்!
கடன்படுவது கண்டிக்கத்தக்கது: ஆயினும் கடன்பட்டவன் பரிவுக்கு உரியவனே. கடன்படுவதற்குக் காரணமான பசப்பிற்காக