பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232 ||

அப்பாத்துரையம் - 42

கடன் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம் ஊறியிருப்பது மட்டுமன்று; அறிவிலும் ஆக்கப்பணியிலும் சிறந்த அறிஞர் களையும் தலைவர்களையும் அது விட்டுவிடவில்லை. உண்மையில் பொது மக்களைவிட அவர்களே எளிதில் அதற்குப் பலியாகிவிடக் கூடியவர்களா யிருக்கிறார்கள். பொது மக்களிடையே வாணிக நோக்கும் உலகியல் நோக்கும் உடையவர்களே பெரும்பாலும் பணத்தை மதித்துக் கடன் படாமலும், கடன்பட்டாலும் அதில் சிக்கி யழியாமலும் தம்மைக் காத்துக் கொள்ளும் பண்பை வளர்த்து வருகிறார்கள். பிற பொதுமக்கள் இதில் கவனக்குறைவாகவே இருக்கிறார்கள். அறிஞர், கலைஞர், பொதுநலத் தொண்டர் ஆகிய பெரியார்கள் தன்னலமும் உலகியல் நோக்கும் அற்றவராயிருப்பதுபோலவே, அடிக்கடி பணத்தினை மதிக்காதவராகவும், எளிதில் கடன்படுபவ ராகவுமே அமைகின்றனர். அறிஞர்களைவிடக் கலைஞர்களே இத் துறையில் எளிதில் சிக்கி அழிகிறார்கள். உணர்ச்சி சார்ந்த அவர்கள் வாழ்வும், அழகு நோக்குடைய அவர்கள் கலையும் அவர்களை இன்பப் பகட்டிலும், பெருஞ்செலவு வாழ்விலும், கவலை களைப் புறக்கணித்தோட்டும் பழக்கத்திலும் தோய வைக்கிறது. அவர்கள் கலையின் பெருமை கடன்பட்ட வரியை மிகைப்படுத்தி, கடன்படு வதையே ஒரு நற்பண்பாக மக்களால் கணிக்கப்பட வைக்கிறது. இது முற்றிலும் உண்மையல்ல. ஆயினும் பொதுவாகக் கடன்படுபவர் பழியின் ஒரு பகுதியை இக் கலைஞர் குறைத்துக்கொள்ளமுடிகிறது.

‘வணிகரறிவைவிட உயர் அறிவுடையவர் அறிஞர்' என்று அறிவுத்துறை பற்றி மிகப் பெருமையாகப் பேசிக்கொண்டவர் அறிஞர் ஃவிரான்ஸிஸ் பேக்கன். ஆனால், அவர் வாழ்விலேயே அவர் அதனை மெய்ப்பிக்கத் தவறிவிட்டார்.இளமைக்காலத்தில் அவர் வருமானம் செலவு ஆகியவற்றைச் சரிசெய்ய முடியாமல் எவ்வளவோ தொல்லைப் பட்டார். முதுமையிலோ தொல்லைகள் பெருகின. அவர் புகழும் வளர்ந்துகொண்டே வந்தது. அவர் வருவாயும் அப்படியே. ஆனால், செலவு வருவாய்க்குள் என்றும் கட்டுப்பட்டிருக்க முடியவில்லை. இதனால் கடன் பெருகிற்று. மேலும் மேலும் பணத்தேவை மிகுந்தது.கடன்காரர்கள் பெருகி அவரைச் சூழ்ந்து ஓயாது நச்சரிக்கத் தொடங்கினர். ஒருநாள்