கட்டுரை முத்தாரம்
9
ளாகிய வெறிகள், சூறாவளிகளாகிய மயக்கங்கள் ஆகிய வற்றை அகற்றித் தெளிவு தருவதுபோலவே, அறிவு மருட்சி, குழப்பம் ஆகியவை அகற்றி அறிவுத்துறையிலும் தெளிவு அளிக்கின்றது. இத்தெளிவுக்கு நண்பன் தரும் நல்லறி வுரையும் உறுதியுரையும் மட்டுமே காரணமன்று. இவ்வறி வுரையைப் பெறுமுன்பே, நண்பரிடம் கருத்துக்களைக் கூறும்போதே, அத்தெளிவை நாம் பேரளவில் பெறுகிறோம். பல்வகைச் சிந்தனையலைகளால் குழம்பிய கருத்துக்கள், நண்பனிடம் ஒருவழி திறந்து கூறுவதன் மூலமே தெளிவு பெறுகின்றன. கூற நாடிய உடனே உருப்பெறா எண்ணங்கள் உருப்பெறுகின்றன; விளக்கமுறாக் கருத்துக்கள் விளக்கமுறு கின்றன; வகை பெறாத விளக்கங்கள் வகுக்கப் பெறுகின்றன. சொல்லுருவில் அவை வெளிவரும்போது மட்டுமே அவன் அதைத் தெளியக் காண்கிறான். ஒருநாள் முழுதும் தனிமையி லிருந்து ஆராய்வதைவிட ஒருமணி நேரம் நண்பனுடன் உரையாடுவதால் அவன் பெறும் தெளிவு மிகுதி. நண்பனின் நல்லுரை கேட்டு முன்பே அவன் தன் அறிவிலும் உயர் அறிவு பெற்றுவிடுகிறான். பாரசீக மன்னரிடம் தெமிஸ்டாக்ஸிஸ் கூறியபடி,கருத்துக்கள் மடித்துச் சுருட்டிவைத்த திரைச் சீலைகள் போன்றன. உரையாடல் அதனை விரித்தமைத்த திரைப்படம் போன்றது. உருவிளக்கமமைந்த சொற்கள் கருத்தில் சுருள் மடிப்புகளாகவே உள்ளன. எனவே நட்பின்பயனை பெறுவது நண்பன் மூலமாகமட்டும் அல்ல; நட்பினாலும் உண்டு. தலை சிறந்த நண்பனது நட்பு உயர் தனிச் சிறப்புடையது என்பதில் ஐயமில்லை. ஆயினும் நண்பர் தகுதிகடந்த தகுதியும் நட்பினுக்கு உண்டு. தான் வெட்டாத சாணையும் கத்தியை நன்கு வெட்டும்படி கூராகத் தீட்டும் தகைமை உடையதன்றோ? அதுபோலவே நண்பர் தகுதியற்றவிடத்தில் கூட, மனிதன் தன் அறிவை அந்நட்புத் திறத்தில் தீட்டிப் பயன் பெறுகிறான். சுருங்கக் கூறினால், தன் கருத்தைத் தன்னிடமே அடக்குவதைவிட, ஒரு சிலையி னிடமோ, ஒரு படத்தினிடமோ கூற முடியுமானால், அங் ஙனம் கூறுவதுகூட மனிதனுக்கு நற்பயன் தரும் என்னலாம்.
நட்பின் இவ்விரண்டாவது பயனில் எல்லோருக்கும் பொதுவே எளிதாக விளங்கும் பகுதி நண்பர்களின் நல்லுரையேயாகும். ஹெராக்ளிட்டஸின் புதிர்போன்ற