வாழும் வகை
249
இடையே பொன்னின் மாயக்கவர்ச்சியில் நான் வாழ்வைக் கழித்து விட்டேன். ஆயினும், பழைய கலைநாட்டம் என்னிடம் அழிந்துவிடவில்லை. மற்றுமொரு தடவை நான் வாழ்க்கை தொடங்கினால் நான் பொன்னின் கவர்ச்சியை நாடமாட்டேன். கலையின் கவர்ச்சியையே நாடுவேன். உங்களுக்கு நான் எடுத்துக்காட்டும் வாழ்க்கைப் படிப்பினை இதுவே,” என்று கூறினார். உண்மையில் செல்வத்தின் பயன் வாழ்வையும், வாழ்வை வளப்படுத்தும் கலையையும் வளர்ப்பது என்பது தவிர வேறன்று.
செல்வத்துக்கும் இன்பத்துக்கும் இன்றியமையாத் தொடர்பு ருக்கிறது என்று கருதுவதற்கில்லை. வேண்டுமானால் ரண்டுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தொடர்பு இருக்கிறது என்றுகூடக் கூறலாம். செல்வம் ஈட்டியவர் வாழ்வில் இன்பமிக்க காலம் செல்வம் ஈட்டிய பின்னுள்ள காலமல்ல. வறுமையுடன் போராடிச் செல்வம் ஈட்டத் தொடங்கிய காலமே. அப்போது, பல நல்ல பண்புகளை வளர்க்கும் வாய்ப்பும் அவர்கட்கு இருந்தது. செலவிறுக்கம் சிக்கனமாக வளர்ந்திருக்க லாம். துன்பம் அவர்களைத் தன்னலமறுத்துப் பிறர்க்கென வாழப் பழக்கியிருக்கலாம். இவ் வாய்ப்பு முழுதும் பயன்படுத்தப்பட்டாலும் படாவிட்டாலும், வறுமையின்போது அவை ஓரளவு துன்பச்சூழலில் இன்பந்தராதிருக்க முடியாது. ஆயினும், செல்வம் வந்தபின் இந்த இன்பத்தை அவர்கள் இழந்து விடுகின்றனர்.
வறுமை, செல்வம் ஆகிய இருநிலைகளிலும் இயற்கை நன்மை தீங்குகளைச் சமமாகவே பகிர்ந்தளித்துள்ளது. வறியவனுக்கு உணவு உடை போதிய அளவு கிடைப்பதில்லை. ஆனால், அவன் உணவு செரிக்க வைக்கும் ஆற்றலும் பசியும் குளிர் வெப்புத் தாக்கி உழைக்கும் ஆற்றலும் உடையவனாயிருக்கிறான். செல்வன் மட்டுக்குமிஞ்சிய ஊணுடை இன்பப் பொருள்கள் நுகர்கிறான்.ஆனால் அவனுக்குப் பசிச்சுவை, உடல் வலு, உடல் நலம், உழைப்பாற்றல் குறைந்து விடுகின்றது. வாத முதலிய நோய்கள் அவன் செல்வத்திற்கீடான பழிகளாகிவிடுகின்றன. இயற்கையின் இந் நடுநிலைப் பண்பறிந்தவர் வறுமை, செல்வம் ஆகிய இருநிலைகளிலுமே ஆவனகொண்டு அல்லன நீக்கி நலம் பெருக்கிக்கொள்வர். இதனை அறியாதவிடத்தில்தான், ஏழை