பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

அப்பாத்துரையம் - 42

செல்வர்களைக் கண்டு பொறாமைப்படவும், செல்வர் ஏழைகளைக் கண்டு பெருமைப்படவும் செய்வர். பெரும்பாலும் ஏழைகளே செல்வரைக் கண்டு பொறாமை கொள்வர். ஆனால், செல்வத்தில் திளைத்த பலர் ஏழைகளைக் கண்டு பொறாமைப் படுவதும் இல்லாததன்று.

பெருஞ்செல்வ னொருவனிடம் நாள்கணக்கில் அரைப் டினியா யிருந்த ஓர் இரவலன் சென்று, “ஐயா, ஒரே பசியாயிருக்கிறது. செல்வச் சீமானே, சிறிது உணவு கொடுங்கள்,” என்றானாம்.செல்வன் உணவு கொடுத்து விட்டு,"இரவலனாகிய நீ என் நிலைகண்டு பொறாமைப்பட வேண்டியதைவிட, நான் உன் நிலைகண்டு பொறாமைப்பட வேண்டியவன்,” என்றான். இரவலனும் மற்ற நண்பர்களும் இதுகேட்டு வியப்படைந்து விழித்தனர். உடனே அவன், “ஏழையின் பசித்துன்பத்தை நான் நினைத்தால் போக்க முடியும். இதோ இப்போதே போக்கியும் விட்டேன். ஆனால், அவன் நினைத்தால்கூட அவன் பசிச் செல்வத்தை எனக்குத் தரமுடியாதே! என் செல்வத்தில் பாதியை நான் துணிந்தால் அவனுக்குத் தந்துவிட முடியும். ஆனால், அதற்கு மாறாக அவன் பசியில் பாதியைத் தா என்று கேட்டால், அவனால் தரமுடியாதே!” என்று விளக்கினான். செல்வனின் புறச்செல்வங் கொடுக்கத்தக்கது, பறிக்கத்தக்கது; ஏழையின் அகச்செல்வம் கொடுக்கத் தக்கதன்று, பறிக்கத்தக்கதுமன்று என்பதை இந்நிகழ்ச்சி நன்கு எடுத்துக் காட்டுகிறது.

ஏழைகள்

செல்வங் கண்டு பொறாமைப்பட்டு செல்வத்தின்மீது மட்டும்தான் பொறாமை கொள்கின்றனர். செல்வத்தை ஈட்டுவதிலும் பேணுவதிலும் உள்ள தொல்லை தொந்தரவுகளை எண்ணிப் பார்த்தால், அவர்கள் பொறாமைப் பட ஏது இராது. டான்ஸிக்குக் கோமகன் ஒரு தடவை உயர்தர அருந்தகத்தில் தனிக்கூடத் தமர்ந்து ஒரு நண்பருடன் உண்டியயர்ந்திருந்தார். அவர் பெருஞ் செலவும் ஆரவார அமைதியும் நண்பன் உள்ளத்தைச் சிறிது அழுத்தின. அதைக் குறிப்பினாலுணர்ந்த கோமகன், “அன்பரே, இந்த ஆரவாரச் செல்வ முழுவதையும் நான் எவருக்கு வேண்டுமானாலும் தரத்துணிவேன். ஆனால், அதற்கு ஒரே ஒரு கட்டுப்பாடு" என்றார். நண்பன் துணிவுடன் “என்ன அத்தகைய கட்டுப் பாடு?” என்றான்.