பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

269

டவசதி என்றும் எங்கும் இராது. இத்தகைய சூழலில் வளரும் ஆண் பெண் குழந்தைகள் மனித நாகரிகத்திற்கு முற்பட்ட விலங்கு நிலையிலேயே வளர்வர். இந்நிலை மாறி வீடு திருந்தி நாடு திருந்தவேண்டுமானால் முதல்முதல் அவ்வகைக்குப் பயிற்சி பெற வேண்டியவர் பெண்களே. ஆண் குழந்தைகள் கல்வி சற்றுப் பிந்தினால் கூடக் குடும்பத்துக்குக் கேடில்லை; பெண் குழந்தை களுக்குக் கல்வியும் நல்ல குடும்பங்களுடனும் நல்ல குடும்ப மரபில் பயின்றவர்களுடனும் பழக்கம் ஏற்படவேண்டுவது இன்றிய

மையாதது.

மனித நாகரிகத்தில் எத்தனை அடிப்படைப் பண்புகள், பழக்கங்கள், பயிற்சிகள், பெண்டிர் குடும்பமரபில் வருகின்றன என்பதை அறிந்தால், மனித இனம் வியப்படையாமலிருக்க முடியாது. பெண்டிரின் மின்னொளி படைத்த கண்கள், செந்தாமரை யிதழ்போன்ற கன்னங்கள், பவழ இதழ்கள் ஆகியவற்றைக் கண்டு அவர்களை வெறும் அழகுப் பொருள்களாகவோ அவர்கள் இன்னிசை, மென்னயப் பேச்சு, நெளிந்த நடை ஆகியவற்றில் ஈடுபட்டு அவர்களை வெறும் கவர்ச்சிப் பாவைகளாகவோ பலர் கருதி விடுகின்றனர்.இவ்வழகும் கவர்ச்சியும் இயல்பாகவே அமைவதாகத் தோற்றினும், உண்மையில் நீடித்த இன மரபுப் பயிற்சியின் விளைவே யாகும். உடலின் இப் புறக் கவர்ச்சியிற் காணப்படும் இதே பயிற்சித்திறம் அவர்கள் அகப்பண்பையும் அதன்மூலம் புறச்சூழல்களையும் மாற்றியமைத்து நாகரிகப் பண்பாக்கும் தன்மையுடையது. அவர்கள் செய்யும் வேலையி லெல்லாம், அழகில் அவர்களுக்குப் பயின்று பழகிய அதே கருத்தைச் செலுத்தும்படி அவர்கள் தூண்டப்பட்டால், எல்லா வேலை களும் ஒழுங்குபட்டுச் சிக்கன முறையில் வளம்பெறும் என்பது உறுதி.

தையல்காரர் ஓர் ஆடவன் அல்லது குழந்தையின் ஆடை யணியைத் துன்னுவதினும், அன்புள்ளமும் அகப்பண்பு நயமும் உடைய ஒரு தாய், அல்லது மனைவி அல்லது உடன்பிறந்த நங்கை துன்னும் ஆடையணியில் எத்தனையோ நயநுட்பமுடைய மேம்பாடு ஏற்பட வழியுண்டு. மருத்துவமனைப் பணியாட்கள் நோயாளியைப் பார்ப்பதைவிட, திறம்படத் தம் கணவர், குழந்தைகள், உடன்பிறந்தார், தாய் தந்தையரைப் பேணும் திறம்