பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

|--

அப்பாத்துரையம் - 42

மனஅமைதி, அறிவுப் பயன் ஆகிய இவ்விரு பெரும் பயன்கள் மட்டுமல்ல; இன்னொரு நிறைபயனும் நட்பினுக்கு உண்டு. செயல் துறையில் நட்பு தரும் உதவி ஒன்றிரண்டல்ல; பல, மாதுளங்கனி தனித்தனி நறுஞ்சாறு பொதிந்த பல விதைக் கொத்துக்களை உடையதாயிருப்பது போல, நட்பு அவ்வச் சமயத்துக்கேற்ற பல செயலுதவிப் பண்புகள் உடையதா யுள்ளது. இப் பல்வேறுபட்ட பயன்களை நேரிடையாக அறிதலரிது. தனி மனிதன் தானே செய்யமுடியாத செயல்கள் எத்தனை உண்டு என்று கணித்துணர்ந்தால், அத்தனையும் நட்பினால் மட்டுமே பெறத்தக்கது என்று சுற்றுமுகமாகக் காட்டத் தக்கதாகவே அமையும்.

“தன்னுடைய மற்றொரு படிவமே தன் நண்பன்,” என்ற பண்டையோர் கூற்று எத்தனையோ செறிபொருள் உடையது. உண்மையில் நண்பன் தன்னினும் மிக்க தன் மறுபடிவம் என்னலாம். மனிதர் வாழ்வுக்கு ஓர் எல்லை உண்டு. இவ் வெல்லை கடந்த அவாவுடைய பொருள்கள் பல. வை தமக்குரியதொரு வாழ்க்கைப் பணியாய் இருக்கலாம். ஒரு மகவின் வாழ்வாயிருக்கலாம். இத்தகைய அவாக்களின் குறையை எண்ணிச் சாகுமுன் பல தடவை உள்ளமழிபவர் உண்டு. உண்மையான நண்பரை உடையவர் இத்துறைகளில் கவலையற் றிருக்கலாம். தம் நலங்கள் தம் வாழ்வு கடந்து நிலவும் என்ற உறுதி அவர்களுக்கு ஏற்படும். இவ்வகையால் நண்பனையுடைய ஒருவனுக்குத் தன் அவாக்களை பற்றிய வரையில் உயிர்கள் உண்டு என்பது முற்றிலும் உண்மை.

ரண்டு

மேலும் மனிதன் வாழ்வு அவன் உடல் சார்ந்தது. அவ்வுடல் எப்போதும் ஓரிடத்தின் வரையறைக்குட்பட்டது. ஆனால், நட்புள்ள இடத்தில் அவன் உரிமைகள் யாவும் அவனுக்கும் அவன் நண்பனுக்குமாக இரட்டிப்பு உரிமைகள் ஆகின்றன. ஏனெனில், எல்லா உரிமைகளையும் அவன் தான் நேரில் வழங்குவதுபோல நட்பின் பேராண்மையால் நண்பன் மூலமாகவும் வழங்குகிறான்.

ஒருமனிதன் தானே தன்வகையில் கூறமுடியாதவை, செய்யமுடியாதவை, கூறினாலும் செய்தாலும் பொருத்த மாகாதவை எத்தனை இருக்கின்றன! தன் குணச்சிறப்பை ஒருவன்