கட்டுரை முத்தாரம்
அரண்மனை யன்று; அகல் அவாப் பொருள் பல கருதிலன்; பயனுடை வாழ்வே கருதினன்; இயற்கையின் மாசிலா அமைதியின் படியே
பொழிலது அமைப்பேன் புன்கலை மதியாது எழிலுறக் கலைஞரும் ஏங்குறும் படியே.
XI
உவர்க்கும் இக்கடு வாய்மையான் உரைப்பச் செவிக்கொளும் பார இலண்டன் சிரிக்கலாம்; சிறுநகை யானும் செய்குவேன் அல்லனோ?
மடமைகொள் மாநக ரேநீ நகுதி; நின்
மடமதி கண்டியான் மறுகுவன் அல்லனோ?
XII
தீய ரானவர் நின் எல்லை தீர்ந்துபின் பேய ரானவர் நின்புற மாயிடில்,
நீயும் நின்பெருங் கோடியும் என்னுறும்? சேரியொன்றெனும் பேரதும் இன்றியே
தனிமை யன்றோரின் தடம்பதி மன்னுறும்?
31
அந்நாளிலே எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு. தனை மேற்கூறிய பாடல்களே காட்டும். அதன் முடிவில் வரும் கருத்து ஹோரேஸினிடமிருந்து மேற்கொள்ளப்பட்டதே. என்னிடம் இத் தனிப் பண்புகளை ஊட்டியது முதிராப் பருவத்திலிருந்தே இலக்கியத்தில் நான் கொண்ட அளவுகடந்த ஆர்வமே என்று கூறத்தகும். இளமரக் கொம்பரில் எழுதிய எழுத்துக்கள்போல அவை மரத்தின் பாரிய வளர்ச்சியுடன் வளர்ச்சியாகப் பாரித்து வளர்ந்து வருகின்றன. எனினும் முதலில் இவ்வார்வம் என் உளத்தில் எப்படி எழுந்தது என்பது என்னால் விடுவிக்க முடியாத ஒரு வினாவே. பாடலில் வரும் இன்னிசை எதுகை மோனைகள் முதலில் என் இளமூளையிலிடம் பெற்ற நிகழ்ச்சியை மட்டும் நான் மறக்கவில்லை. அவற்றின் கலகலப்பு என்றேனும் என் செவியைவிட்டகன்றாலல்லவா அவற்றை