பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. கவிதை ஸர் வில்லியம் டெம்பிள்'

மக்கள் வாழ்வு, சிந்தனை ஆகிய இரண்டையும் ஆட் கொண்டு ஈடுபடுத்தும் அடிப்படை நோக்கங்கள் ஆதாயம், ன்பம் ஆகியவை. இவற்றை உடையவர் முறையே ஊக்க முடையவர் என்றும், சோம்பர் என்றும் கருதப்படுகின்றனர். இந்நோக்க வேறுபாடுகள் வெறுஞ்சொல் வேறுபாடுகளா, உண்மையிலேயே பொருள் குறித்த வேறுபாடுகளா என்ற வினா எழுப்பப்படுவதுண்டு. இங்ஙனம் இங்ஙனம் எழுப்புபவர், எழுப்புபவர், "ஆதாய நாட்டமும்,ஆதாயமூலம் கிடைக்கக்கூடும் இன்ப நாட்டந்தானே; இன்பப் பொருளில் நேரிடையாகத் திளைக்கும் இன்ப நாட்டத் தானைப் போலத்தானே ஆதாய வாயிலாகத் தனக்கு இன்பம் விளைக்கும் பொருள்களில் ஆதாய நாட்டத்தான் திளைக் கிறான்," என்று கேட்கிறார்கள். ஆனால், சொற்கடந்து சொற் பொருளை நுணுகித் தீட்டுவது சொல்லின் தன்மையை மீறுவதாகவே முடியும். எல்லையின்றி மிக நுண்ணியதாக நூற்ற நூல் ஆடையாகப் பயன்படாது, அறுந்து போய்விடும்; எல்லை யின்றி முனைபடத் தீட்டிய ஊசி முனை துன்னப் பயன்பட மாட்டாது, முறிந்துபோய்விடும். அது போலவே சொல்லின் நுட்ப வேறுபாடுகளை ஒருவர் பெருக்கினால் அதன் பருமதிப்புக்கு மாறாக அது பொருள் பட்டுவிடக்கூடும். ஒரு நாணயத்தின் மதிப்பு முனைப்பான அளவில் வேறுபட்டாலன்றி அதன் பொற்கலவை மதிப்பால் பாதிக்கப்படாதது போல, சொல்லின் பருப்பொருள் மதிப்பு அதன் நுட்ப வேறுபாடுகளால் பாதிக்கப்படமாட்டாது. எனவே, பொதுமக்கள் வழக்கடிப் படையாக நின்று பார்த்தால் ஆதாயம், இன்பம் ஆகிய இரண்டும் இருவேறு அடிப்படை நோக்கங்களே யாகும். ஆதாயம் நாடுவோர் ஊக்கமுடையவர்; இன்ப நாட்ட