பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. வசையுரையின் பொல்லாங்கு ஜோஸஃவ் அடிசன்

கொடும்படை வால்ஷியர் குமுறுமுள்ளத்தர்,

கெடும்பு செய்தவர் நேடிக்காண்கிலார், நெடிய வன் பழி தீர்வகை கண்டிலர்.

விர்கில் - டிரைடன் மொழிபெயர்ப்பு.

மனிதருடைய நல்ல பெயரை மறைந்து நின்று வசையம்பு எய்து கெடுப்பவரின் உள்ளப்பண்பைவிடப் பெருந் தன்மை குன்றிய, கீழ்த்தரப் பண்பைக் காண்பது அரிது. நஞ்சிட்ட அம்புகள் ஊறு செய்வதுடன் அமைய மாட்டா! அம்புபட்ட காயம் கொல்லாது விட்டாலும், குணமடைய விட்டாலும், நஞ்சு அது குணமடைய விடாமல் கொன்றே தீரும். வசையம்பு இந் நஞ்சிட்ட அம்புபோலப் பழியில் பழி நாடி பழி முற்றுவிக்குந் தன்மையுடையது ஆகும். இது காரணமாகவே பிறருக்கு ஊறு செய்யும் இயல்புடைய வம்பரிடம் வசைத்திறமும் நகைத்திறமும் இருப்பதை நாம் விரும்புவதற்கில்லை. ஏனெனில் வம்பர்மனம் பிறரைப் புண்படுத்துவதில் அடையும் மகிழ்ச்சி வேறெதிலும் அடைவதில்லை. தனி ஒரு மனிதன் துயரம், உறவினன் ஒருவன் அடையுந் தொல்லை, குடும்பங்களின் அலைக்கழிவு ஆகியவை இத்தகைய வம்பரின் வம்பார்வத்தால் விளையத் தக்கவை. அம்பேறுண்டவர் பெரும்பாலும் அம்பையும் அம்பெய்தவனையும் காணக்கூடும். காணாவிடத்தும் பிறர் செயல் என்று பலரும் அறியக்கூடும். ஆனால், மறைந்து நின்று எய்யப்படும் வசையம்பானது எய்தவனை மட்டுமன்றிப் பலசமயம் அம்பையே மறைப்பதாகும்.

வசையெழுத்தாளர் பெருத்த வம்பராகவும் குறும்ப ராகவுமிருந்து, அறிவு, கலைத் திறமுடையவராகவும்