பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரை முத்தாரம்

49

எண்ணுகிறேன். நச்சுக்கோப்பை பருகுமுன் இன்னுரையாடிக் கொண்டிருக்கும் நயநாகரிகமுடைய ந் நற்பண்பாளர் அவ்வின்னுரையிடையே உயிரின் அழியாமைபற்றிப் பேசப் புறப்பட்டு, தொடக்கத்திலேயே உயிரின் அழியாமை பற்றித் தமக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடுகிறார். நிகழ்ச்சிக் காலத்துக்குப் பொருத்தமற்ற இப்பேச்சுக்குக் காரணம் அரிஸ்டோஃவானிஸ் தம் நாடகங்களில் அவரைத் தாக்கி ஏளனம் செய்திருந்ததேயாகும். சாக்ரட்டீஸ் வாழ்ந்திருந்த போது அரிஸ்டோஃவானிஸின் ஏளனம் அவரைப் புண்படுத்திய தாகத் தெரியவரவில்லை. அத்தகைய வசை நாடகங்கள் பலவற்றை அவரே சென்று அமைதியுடன் பார்த்திருந்ததாக அவரைப் பற்றிய நூலாளர் உணர்த்தியுள்ளனர். ஆயினும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து அவர் ஆழ்ந்த உள்ளத்தடத்தில் அரிஸ்டோஃவானிஸின் ஏளனம் அவரையும் அறியாமல் அவரை நுட்பமாக உறுத்திக் கொண்டேயிருந்தது என்றுதான் உய்த்துணரத் தகும். சாக்ரட்டீஸின் சான்றாண்மை இந் நுட்ப ஊறுபாட்டைக் கவனியாமல் புறக்கணித்து ஒதுக்கியிருந்ததேயன்றி வேறன்று. சிறு மனங்களில் அது வளர்ந்திருக்கக் கூடும்.

சான்றோர்கள்கூட வசையை உள்ளூர விரும்பவில்லை என்பதைப் பல வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன.பேரரசர் ஜூலியஸ் ஸீஸரை மன்றத்தின் தளத்தில் காட்டுல்லஸ் தாக்கியபோது, ஜூலியஸ் ஸீஸர் அவரை வரவழைத்து மிகவும் நேச இணக்கத்துடன் நடத்தினாராம். இப்பெருந்தன்மையின் விளைவாகக் கவிஞர் காட்டுல்லஸ் அதுமுதல் அவருடைய மாறாத நண்பர் ஆகிவிட்டார். இதுபோலவே திருத்தூதர் மஃஜாரின் தன்மீது வசைபாடிய கவிஞன் கில்லெட்டைப் பெருமைப்படுத்தி உயர்வுபடுத்தியதனால், அவ் வசைப்பகுதி அகற்றிய இரண்டாம் பதிப்பை வசைக்காளான அத் தலைவருக்கே அவர் படையல் செய்தாராம்.

வசைக்காளான பெரியோர்களில் மேற்கூறப் பட்ட வர்கள் பெருந்தன்மையுடையவர்கள். சிறுமை மனம் படைத்த வர்களும் உண்டு. திருத்தந்தை செக்ஸ்டஸ் குவின்டஸ் அப் பதம் பெற்றபோது, நகரின் பழஞ்சிலை ஒன்றின்மீது யாரோ ஒரு நயநாகரிகக் குறும்பன் அழுக்குக் கந்தையாடைகளைச் சுற்றி