54
அப்பாத்துரையம் - 42
முற்றிலும் தீங்கு செய்பவையாகவும் தீச்செயல்கள் தீமையில் தீமையாகவும் மாறுகின்றன.
நடுநிலை நோக்கமோவெனில் நற்செயலின் நன்மையைக் கெடுத்து விடுகின்றது; நடுத்தரச் செயலைப் பயனில் செய லாக்குகின்றது. இழிசெயலை இழிசெயலாகவே வலியுறுத்து கின்றது.
மேற்கூறியவற்றால், உயர் நோக்கங்களில் பழகிய உள்ள முடையவரா யிருப்பதனால் சொல்லொணா நல்வினைகள் உண்டாகின்றன. நம் எண்ணங்கள், சொற்கள் செயல்கள் யாவற்றையுமே கடவுட் பற்று, உயிர்நிலை மேம்பாடு, மனித உலக நலன் ஆகிய ஏதாமொரு உயர்நோக்கத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அவ்வெண்ணங்கள், சொற்கள், செயல்கள் உயர்வுற்று மிகுபயன் விளைவிக்கின்றன.
பணத்தைத் திட்டப்படுத்திச் செலவிடுவதால், அதன் விலைமதிப்பு பெருகுகிறது. அதுபோலவே நோக்க அடிப் படையான செயல்கள் திட்டப்படுத்தப்பட்ட செயல்களான படியால், எந்தச் செயலும் இதனால் வீணாகாமல், கூடிய மட்டும் பயன்தந்தே நிற்கின்ற நிலையை அடைகிறோம். மேலும் அது நம் நற்பண்புகளைப் பெருக்கி அல்பண்புகளை அருகுவித்து நமக்கு நிலையான பண்பாடு தருகிறது.
குளித்தல், கைகால் கழுவுதல், ஆடை, உணவு முதலிய எண்ணற்ற துறைகளில் கட்டுப்பட்ட சமய வினைகளைப் புகுத்தியுள்ள யூதர் சமயத்தைப்பற்றி அக்கோஸ்டா என்ற யூதரிடம் லிம்பார்க் என்ற கிறித்தவ நண்பர் குறை கூறிய போது, அவர் கூறிய மறுப்பு இங்கே கவனத்தில் கொண்டு வருவதற் குரியது. "சமய வாழ்வின் முக்கிய பகுதியான ஒழுக்கத் துறையில் எப்போதும் பழகிப் பயிற்சிப் பழக்கம் உண்டாவதற்குரிய செயல்கள், நிகழ்ச்சிகள் மிகமிகக் குறைவே. மேலும் ஒழுக்கப் பண்பைச் செயல்துறையில் ஈடுபடுத்திப் பயிலக் காலம், இடம், ஆகிய தொடர்புகள் வந்து இணையும்நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் அதற்குரிய வாய்ப்புக் கிட்டும். ஆகவேதான் நல்லன, தீயன என்ற பாகுபாட்டுக்கு உட்படாமல், ஒழுக்கமுறைச் சார்பற்றவையாகிய பல சிறு செயல்களைத் தெய்வப் பற்றின் அடிப்படையில் கொண்டுவந்து, அவற்றின்
ற