இருதுளிக் கண்ணீர்
83
எப்போதாவது யாராவது உள்ளே உள்ளே நுழைவதை மக்கள் கண்டாலும் கூட, அவர்கள் அதை எவரிடமும் கூற மாட்டார்கள். கூறினாலும் எவரும் அதைப் புலம் விசாரிக்கத் துணியமாட்டார்கள். உண்மையில் புலிக்கும் சிங்கத்துக்கும் அஞ்சாத ஊர்காவலர்களும் படை வீரர்களும்கூடப் பேய் என்றால் எட்டிப் பார்க்கமாட்டார்கள்.
கள்ளவாணிகக்காரர்
திருடர், கள்ளக் காதலர், ஆகியவர்களின் செல்வாக்கினாலேயே உலகில் பேய் பற்றிய நம்பிக்கை நீர் வார்த்து அழியாமல் பேணப்படுகிறது என்னலாம்.
ஆனால், அச்சமும் சில தரத்தவருக்கு ஒரு ஆர்வத்தை ஊட்டுவதுண்டு.பண்டைக்கால மனிதன் அச்சத்திடையே அன்பு செலுத்தினான். அச்சத்திடையேதான் அவன் இன்பமடைந்தான். ஆகவே, அஞ்சிய பொருளையெல்லாம் அவன் கடவுளாகக் கண்டு வணங்கினான். இன்னும் அதனாலேயே பக்தியை நாம் பயபக்தி என்கிறோம். அச்சத்தைப் போலவே துன்பமும் பலரால் விரும்பப்பட்டு இன்பமூட்டுவதுண்டு. சாவுக்காட்சி கொலைக் காட்சிகளையும், துயரக் கதைகளையும் நாடகங்களையும் நாம் காண விரும்புவது இதனாலேயே. இதே வகையான ஆர்வங்கலந்த அச்சம், அச்சங்கலந்த ஆர்வம் டார்டிவலிலுள்ள மூன்று சிறுவர்களை ஒருநாள் இயக்கிற்று. அவர்கள் தொலைவிலிருந்தே அஞ்சி அஞ்சி, பதுங்கிப் பதுங்கி, பீளீன்மாண்ட் பக்கமாக வந்தார்கள். அச்சம் கால்களைப் பின்னிழுத்தன. ஆர்வம் தலையை முள்தள்ளின.
சிறுவரில் இருவர் கெர்ஸ்னிக்காரர். அவர்கள் திண்ணிய உடலுடையவர்கள். ஆனால் அச்சம் அவர்களைக் கோழைகளாக் கிற்று. மூன்றாவது சிறுவன் ஃவிரஞ்சுக்காரன், நோஞ்சலான உடலுடையவன்; ஆனால், அச்சம் அவன் ஆர்வத்தைத் தூண்டி அவனை வீரனாக்கியிருந்தது.
அவர்கள் இரவெல்லாம் பதுங்கிப் பதுங்கி மாடத்தைச் சுற்றி வந்தனர். அவர்கள் முதலில் உள்ளே ஒரு பேயைக் கண்டார்கள். எப்படியோ மற்றொரு பேயும் உள்ளே வந்தது. பேய்கள் பேசின. பேய்கள் பேச்சுச் சிறுவர்களுக்கு எப்படி புரியும்! ஆயினும்,ஒருவன் வெளிநாட்டுக்குப் போக விரும்பினான்.