பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




17. தீமையின் கருவில் நன்மை

உணவில்லாமல், நண்டும் சிப்பியும் காளானும் உண்டு கில்லியட் பழகிவிட்டான். ஆனால், இப்போது சமைக்கத் தக்க உணவு எதற்கும் வழியில்லை. ஏனெனில், அவன் கொல்லுலை முழுதும் நீர் மாயமாய்ப் போயிற்று. இரண்டு நாளாகப் புயலில் நண்டும் சிப்பியும் கடல் பாறைகளை விட்டகன்று சென்று விட்டன. அவற்றைத் தேடி அவன் பாறையிடுக்கில் நெடுந்தொலை சென்றான். ஓரிடத்தில் காலடியிலிருந்து நீருக்குள் ஒரு பெரிய நண்டு ஓடிற்று. அதை அவன் தொடர்ந்து வேட்டையாடினான். அது நீரடியிலுள்ள ஒரு குகையில் சென்றது. நீருள் மூழ்கி அவனும் பின் தொடர்ந்தான். உள்ளே குகை நீர் மட்டத்துக்கு மேலே உயர்ந்திருந்தது. அதைக் கண்டதும் அதுமுன் வேறு ஒரு குகையின் கோடியிலுள்ள விளிம்பின் மூலம் அவனுக்குக் காட்சியளித்த அதே குகையே என்பது தெரிந்தது. அதன் அழகு முன்பே அவனைக் கவர்ச்சி செய்திருந்தது. இப்போது நேரிலேயே காண, அது கண்கொள்ளாக் காட்சியாகவே இருந்தது. சுற்றிலும் பாறையில் நீருக்கு வெளியே மங்கிய நீல நிறமும், நீருக்குள்ளாகப் பவளவண்ணமும் உடைய கொடிகள் ஒட்டிக் கொண்டிருந்தன. நீரின் அசைவால் அவை அடிக்கடி நிறமாற்றமடைந்தன. தள மட்டத்திலுள்ள கூழாங்கற்கள் உருண்டு திரண்டு பளபளப்பாய், குருதி நிறமாயிருந்தன. குகையினுள் குகையாயிருந்த பகுதியும் பெரிதாகவே இருந்தது. அதில் முன் பகுதியில் ஏதோ ஒன்று நண்டுப் புடைபோல் தென்பட்டது. தான் துரத்தி வந்த நண்டு அதில்தான் பதுங்கியிருக்கக்கூடும் என்று அவன் எண்ணினான். பசியார்வத்தால் அதைப் பிடிக்க அவன் துடித்தான். கையை உட்குகை வழியாகச் செலுத்தி அதில் துழாவினான். துழாவிய வுடன் கையில் ஏதோ கடித்தது மாதிரி இருந்தது. நண்டுதான்