பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

அப்பாத்துரையம் - 44

சலீம் நெஞ்சம் துடித்தது. “சம்பளத்திற்காகவா நீ கண்ணீர் விட வேண்டும்? அமர்! உன்னிடம் இல்லாவிட்டால் என்ன? நான் கொடுக்க மாட்டேனா? என்னிடம் ஏன் கேட்கக் கூடாது?” என்று அவன் கெஞ்சலாகக் கேட்டான்.

அமர்காந்த் இப்போதும் வாய் திறக்கவில்லை. அவன் தொண்டை கம்மியிருந்தது. ஆனால், கலக்கம் தெளிந்துவிட்டது. என்பதைக் கண்கள் காட்டின. அவன் சலீமீன் கைகளைப் பற்றிக்கொண்டு “கேட்க முடியவில்லை. உனக்கு மட்டற்ற நன்றி” என்று தழுதழுத்துக் கூறினான்.

66

“என்னிடம் கேட்க ஏன் வெட்கம்? நான் உன் நண்பன், அயலான் அல்ல; மைத்துனன்கூட அல்லவே” என்றான்.

அமர்காந்த் இக்கேலிப் பேச்சின் பயனாகத் தன்னுணர்வு பெற்றுச் சிரித்தான்.

இருவரும் சென்றனர்.

கைகோத்துக்

காண்டு வகுப்புக்குச்

அமர்காந்தின் தந்தை சமர்காந்த் ஒரு சேட். நகரின் தலை சிறந்த செல்வருள் அவர் ஒருவர். அவர் தந்தை குடிசையில் தான் வாழ்ந்திருந்தார். ஆனால், அவர் இன்று வாழ்ந்திருந்த

டமகன்ற மாளிகை அந்தக் குடிசையையும், அதனுடன் தோழமை கொண்ட பல நூறு குடிசைகளையும், தெருக்களையும் விழுங்கி, வானளாவிய மாடகூடங்கள் மூலம் ஏப்பமிட்டது. நகரின் பொது மக்கள் வாழ்வை, முழுதும் தம் காலடியில் போட்டு அடக்கியாண்ட ஒன்றிரண்டு செல்வருள் அவர் இடம் பெற்றிருந்தார். ஆயினும், இச்செல்வ வாழ்வினாற்கூட அவர் குடும்பம் வளம் பெறவில்லை.

அவர் முதல்

மனைவி

அமர்காந்த் பிறந்த சில ஆண்டுகளுக்குள் உயிர்நீத்தாள். இரண்டாவது மனைவி செல்வர் மனையிற் பிறந்து, புதுச்செல்வம் ஆளவந்தவள். அவள் குடும்ப ஆட்சியில் அமருக்கு ஏற்பட்ட வறுமை ஏழைக் குடிசையிலுள்ள பிள்ளைகள்கூடக் காணாதது. ஏனெனில், அது அன்பு வறுமை. தந்தையோ, மனைவி மக்களைவிடச் செல்வத்திலேயே கருத்துச் செலுத்தியிருந்தார். குடும்பத்துக்காக அவர் செல்வம் ஒம்ப வில்லை. செல்வத்துக்காகவே குடும்பம் ஒம்பினார்.