120
66
அப்பாத்துரையம் - 44
என் பணம் இல்லாமலா நீ சாப்பிடுகிறாய், படிக்கிறாய்? னக்காகப் பணம் சம்பாதிக்க நான் பாடுபடுகிறேன். உனக்குக் கொஞ்சமும் நன்றியில்லை.”
"என் நன்றியை நீங்கள் எதிர்பார்க்கவும் வேண்டாம். எனக்காக எந்தப் பாடும் படவேண்டாம். நான் உழைத்துப் பாடுபட்டுப் பொருள் சம்பாதித்துக்கொள்வேன். மண் வெட்டுவேன்; அல்லது இராட்டை சுற்றுவேன். உழைப்பவரைச் சுரண்டி ஈட்டும் சோம்பேறிச் செல்வம் எனக்கு வேண்டாம்."
அறையில் நூற்கும் வட்டும் இராட்டை யும் இருந்த திசையில் இருவர் கண்களும் சென்றன. அவர் சிரித்தார். “மண் வெட்ட உனக்கு வராது. நூற்பு வட்டும் இராட்டையும் சுற்றும் ஏழைக்கு ஒருநாள் முழுதும் வேலை செய்தால் நான்கணாக் கிடைக்கும். அதைக்கொண்டு உன் இன்ப வாழ்வும் ஒய்யாரப் படிப்பும் எப்படிக் கைகூடும்? காந்தி பெயர் கூறிச் செல்வர் மதிப்புப் பெறத்தான் அவை உதவும், ஏழைகள் பிழைப்புக்கே அவை உதவமுடியாதே!'
அமர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. சேட்டுகளின் இவ்வேதாந்தம் அவன் கனவுக்கோட்டையை ஊறுபடுத்திற்று. “எனக்கு இன்ப வாழ்வும் வேண்டாம், ஒய்யாரக் கல்வியும் வேண்டாம். உழைத்த கூலி கொண்டு வாழும் வாழ்வும் கல்வியுமே போதும். தங்கள் பணம் இல்லாமல் வாழ நான் பழகிக்கொள்வேன்” என்றான்.
"நீ பக்கிரி மனப்பான்மை கொண்டிருக்கிறாய். ஏன், பக்கிரியாவதுதானே?” என்று ஏளனமாகக் கூறிவிட்டு சமர்காந்த் வெளியேறினார்.
'காந்தி பக்கிரிதானே' என்று எண்ணிக் கொண்டான் அமர். ஆயினும் இப்பேச்சு அவன் உள்ளத்தின் மேலாப்பைக் கலைத்துவிட்டது. "இனி தந்தை பணத்துக்கேற்ற வாழ்வு வாழவோ, அதற்குரிய கல்வி கற்கவோ கூடாது” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால், சொற்கள் வாய்மூலம் வெளிவந்தன.
நைனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மிரள மிரள விழித்தாள். ‘அண்ணன் ஏன் அப்பாவை எதிர்க்கவேண்டும்,