இருதுளிக் கண்ணீர்
143
மறுநாள் அமர், சேவாசிரமம் சென்று வழக்கம்போல் திரும்பினான். வருவாய்க்கு என்னவழி என்று சுகதா சுண்டிக் கேட்டாள். "இதோ வழி பார்க்கிறேன்" என்று அவன் வெளியே புறப்பட்டான். இதுவரை முதலாளி இனத்தவனாயிருந்து குனியாது, நிமிராது, உயர்வாழ்வு கழித்த அவன் துணிமணி விற்பனையாளாக இருந்து தெருத்தெருவாகத் துணிவிற்றான். மக்கள் மலைப்புற்றனர். சிலர் கேலி செய்தனர். பல செல்வர் தடுத்தனர். ஆனால், அவன் செல்வரைத் திட்டிக் கொண்டே செயலாற்றினான், என்றாலும் செல்வர் ஆதரவு காட்டினர். வருவாய் சிறிதானாலும் அவனுக்குப் பெரிதாயிருந்தது.
சுகதாவின் தியாகம், கணவன் தன்மதிப்பைவிட்டுச் செல்வதை விரும்பவில்லை. அவள் வழக்குமன்றத் தலைவர் மனைவியை அடுத்து, அவள் ஆதரவால் மாதம் 50 வெள்ளி ஊதியத்தில் ஓர் ஆசிரியை ஆனாள். இதன் உதவியால் அவள் ஓரளவு செல்வ வாழ்விலேயே வாழ முடிந்தது. அமர் ஏழை போல வாழ விரும்பினான். அவள் மறுத்தாள். அமருக்கு உள்ளம் சுட்டது. அதேசமயம் அவன் வெறுப்புத் தியாகமும் அவமதிப்பான செயல்களும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் சுகபோக அவா, உயர்குடிப் பெருமையை அவன் உளமார வெறுக்கத் தொடங்கினான். கணவன் மனைவியரிடையே பெரும் பிளவு ஏற்பட்டது.
சமர்காந்த் குடும்ப இறுமாப்பினாலேயே மகனையும் மருமகளையும் துரத்தியிருந்தார். அவர் என்றும் வீட்டுணவின்றி விடுதி உணவு உண்ணுவதில்லை. இப்போது அவர் கடையையும் வெறுத்து அடைத்துவிட்டார். பழமும், பாலும் உண்டு நோய்ப்பட்டார். இதுகேட்டுச் சுகதா மனமிளகினாள். அங்கொரு வேளையும், தன் வீட்டிலொரு வேளையும், சமைத்துத் தொழிலும் ஆற்றினாள். ஆனால், அமர் தந்தை திசை நாட மறுத்து, தந்தையையும், அவர் போன்ற பணக்காரரையும் அவ்வாழ்வு வாழும் சுகதாவையும் வெறுத்து எப்போதும் வெடிமருந்து நிறைந்த ஒரு உயிர்வாணமாக இயங்கினான்.
புறவாழ்வு புயலாயினும் அமரின் அகவாழ்வில் சகீனா இன்ப ஓவியமாய்த் திகழ்ந்தாள். ஆனால், இத்துறையிலும் புயல் வீசத் தொடங்கிற்று. ஒரு நாள் பட்டாணிச்சி அவனிடம் வந்து