பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இருதுளிக் கண்ணீர்

145

கிடையாது, ஆர்வமில்லை. நான் உன்னுடன் எங்கேனுஞ்சென்று கூலிப்பிழைப்பு பிழைக்கத்தயார்."

66

சுகதாவை நீங்கள் குற்றஞ் சொல்லக்கூடாது. அவள் உங்கள் நன்மையைத்தான் நாடுகிறாள். நான் கேள்விப்பட்டேன், நீங்கள் மூட்டை சுமந்து விற்கிறீர்கள் என்று. சுகதா உங்களைத் தடுக்க விரும்புவது இயற்கையே. அதை நான் கேட்டபோது வருந்தினேன். எனக்கு முடிந்திருந்தால் உங்கள் மூட்டையைச் சுமந்து கொண்டு உங்கள் பின்னால் வந்திருப்பேன்.

அவள் தூயகளங்கமற்ற அன்பும் பணிவும் அமர் உள்ளத்தில் மின்சாரம்போல் பாய்ந்தன. அவள் அவனை அணைக்கத் தாவினாள். அவன் பின்னடையவில்லை. அவளைத் தன் பிடியில் அணைத்துக்கொண்டே “நீ எனக்காகக் காத்திருந்தால், நான் உன்னுடன் வெளியேறத் தயார்” என்றான். இதற்குள் பட்டாணிச்சி வந்துவிட்டாள். அவள் பெண் புலியென அமர்மீதும் மகள் மீதும் சீறினாள். காலி, வீணன் என்று வைதாள். ஆனால், சகீனா அவளைச் சட்டைபண்ணாமல் அவனை வாயிற்படிவரையில் தொடர்ந்து “நாளை வாருங்கள்” என்று கூறியனுப்பினாள்.

அமர் உள்ளமும் உடலும் துடித்தன. அவன் சலீமிடம் சென்று தன் முடிவும் துணிவும் உரைத்தான். சலீமுக்கு இம்முடிவு பிடிக்கவில்லை.ஆனாலும் ஒன்றும் செய்யத் துளையாமல் பேசிக் கொண்டே மறைவாகத் தன் பணியாள் சமர்காந்தை வரவழைக்க அனுப்பினான்.

பட்டாணிச்சியும் மகளை வாயாற வைது அவளை வீட்டினுள் இட்டுப் பூட்டிவிட்டுச் சமர்காந்திடம் சென்று அமர் செய்தியை பன்மடங்கு பெருக்கித் தூற்றினாள். அவர் அமர்காந்த் சிக்கிய இக்காதல் மூலமே அவனை அடக்கித் திருத்த எண்ணியதோடு,பட்டாணிச்சிக்குப் பொருள் கொடுத்து அவள் வாயடைத்து விடவும் எண்ணினார்.

சலீம் வீட்டில் அமர்காந்தை அவர் சந்தித்துப் பேசினார். தந்தை மகன் வேறுபாடு, அகவேறுபாடாக விரிவுற்றது. அமர் "நான் உங்கள் வீம்பு வாழ்வும், போலி மதிப்பும் விரும்பவில்லை. பொம்மை மனைவிகளும் வேண்டாம்.சகீனாவுக்காக மதம், உலக மதிப்பு, பணம் யாவும் இழக்கத் தயங்கமாட்டேன்” என்றான்.