பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

அப்பாத்துரையம் - 44

படைகள் அகற்றப்பட்டு ஐரோப்பாவில் பகுத்தறிவு மறுமலர்ச்சி ஏற்பட்ட காலம் இதுவே. மேலைநாட்டு நாகரிகமெனப்படும் இன்றைய புத்துலக நாகரிகம் உலகெங்கும் பரவத்தொடங்கிய காலம் இது. இவ்வறிவொளிக்குத் தூண்டுதலாயிருந்தும் தொல் பழங்கால நாகரிகத்துடன் தொடர்பு கொண்டு அதனைச் சிறிது காலம் பேணி வளர்த்த இலத்தீன் கிரேக்க நாகரிங்களே என்பதும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. 5 ஆம் நூற்றாண்டிலேயே இலத்தீன (உரோம்) நாகரிகத்தாலும், 12ஆம் நூற்றாண்டில் அராபிய நாகரிகத்தாலும் ஐரோப்பா சிறிது மின்னொளி கண்டது.15ஆம் நூற்றாண்டில் கிரேக்க இலக்கியத்தாலும், 19 நூற்றாண்டில் வடமொழி இலக்கியத்தாலும் அறிவொளி பகலொளியாகப் பரந்தது. இவையனைத்திலும் தொல்பழங்கால நாகரிகத்துடன் நேரிடையான தொடர்புடைய தமிழ் இலக்கிய அறிவும், திராவிட நாகரிக அறிவும் பரவும் காலத்தில் உலகின் இவ்வெள்ளொளி பட்டப்பகலொளியாய் வளரும் என்பது எம் நம்பிக்கை.

தமிழகம் இன்று பழைமையும் புதுமையும் போராடும் போர்க்கள மாயிருந்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் உண்டாயினும், தமிழகத்தின் நிலை இவ்வ கையில் தனிப்பட்டது என்பதைப் பலர் கவனிப்பதில்லை. மேனாடுகள் புதுமையில் முன்னேறி நாட்டுடன் நாடு போட்டியிட்டு வருகின்றன. ஆனால், புதுமையுடன் பழைமை அங்கே போராடவில்லை. ஏனெனில், பழைமை என ஒன்று அங்கே கிடையாது. அவர்கள் மேற்கொள்ளும் பழைமை வெளிநாட்டு வரவென்பதை அவர்கள் அறிவதால், அவர்கள் தற்பண்பை அது கெடுக்கவில்லை. வேண்டிய அளவு அறிவுக்கொத்த நற்கூறுகளை மட்டும் கொண்டு, அதன் தீமைகளுக்கு அடிமைப்படாமல் வளர்ச்சியடைகின்றனர். ஆனால், கீழ் நாடுகளில் பொதுவாகவும், தமிழகம் நீங்கலான இந்தியாவில் சிறப்பாகவும் நாகரிக வளர்ச்சி குன்றிய டையிருட்காலப் போலிப் பழைமையே உண்மையில் பழைமை என்று தவறாகக் கொள்ளப்பட்டு வருவதால் அப் போலிப் பழைமை புதுமையை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில், இந் நாடுகளிலெல்லாம் இப் போலிப் பழைமையே பழைமையாகவும், அதுவே தற் பண்பாகவும், தேசியப் பண்பாகவும் கொள்ளப்படுவதனால் புதுமை வெற்றி பெறினும்