பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

183

தெளிவும் மிக்கதாயிருப்பதைக் காண்கிறோம். பிரஞ்சுமொழி, செந்தமிழ் போன்றே தெளிவும் சுருக்கமும் நயமும் உடையது.

லக்கியத்தில் பிரஞ்சுமொழியின் தனிப்பெருஞ் சிறப்பு அதன் ஒப்புயர்வற்ற உரைநடை இலக்கியமாகும். மற்றெல்லா நாடுகளிலும் பாட்டின் அமைப்பில் செலுத்தப்படும் கவனமும் கலைநோக்கும் இம் மொழியில் உரைநடையிலேயே செலுத்தப் படுகிறது.எழுதும் உரைநடை மட்டிலுமின்றி, உரையாடலிலும் சொற்பொழிவிலும் இதே முறையில் பிரஞ்சு மொழி முதன்மை பெற்றிருக்கிறது. ஐரோப்பாவெங்கும் நாகரிகமிக்க மனிதர், சிறப்பாக நங்கையர் விரும்பிப் பயிலும் மொழி பிரஞ்சு மொழி யேயாகும்.

இப் பண்பின் பயனாக இன்னோர் அரிய சிறப்பும் பிரஞ்சு இலக்கியத்துக்கு ஏற்பட்டுள்ளது. இலக்கியத்தின் பெருமை நாட்டு மக்களின் வாழ்க்கையை உருவாக்குவதைப் பொறுத்ததாகு மானால், உலகின் வேறெம்மொழியையும் விட பிரஞ்சில் இலக்கியம் பொதுமக்களின் சமயம், அரசியல், வாழ்வியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் புகுந்து அதில் தன் பண்பைப் பொறித்ததுபோல் வேறெவ்விலக்கியத்திலும் பொறித்திருக்க முடியாது. வால்த்தேரின் பகுத்தறிவு' ரூசோவின் வாழ்வியல் ஒப்பந்தம்2 எமிலியின்' தற்சரிதை போன்ற நூல்கள் பிரஞ்சு மக்கள் வாழ்வைப் புதுக்கி வளர்த்துடன் நில்லாது உலகையே மாற்றியமைக்க உதவின. பிரஞ்சு இலக்கிய ஆசிரியன் வெறும் நூலாசிரியன் மட்டுமல்லன்; பிரஞ்சு நாட்டு வாழ்வையும் அதன்மூலம் உலக வாழ்வையும் வாழ்வையும் படைக்கும் அல்லது மாற்றியமைக்கும் கலைப் படைப்பளனாகவே அவன் சிறந்து விளங்குகின்றான்.

4

பிரஞ்சு மொழியின் சிறப்பு உரைநடையிலேயே முதன்மை யுடையது என்பதனால் பாட்டில் சிறப்பில்லை என்று கொண்டு விடக்கூடாது. உலக இலக்கியத்தில் உரைநடையே அதற்கு ஈடும் எடுப்புமற்ற முதன்மை தருவது என்பதனால் மட்டுமே அது முதற்கண் கவனிக்கத் தக்கதாகின்றது.பாட்டிலும், நாடகத்திலும் இதே கலைத் திறனைக் காணலாம். 17 ஆம் நூற்றாண்டில் பேரரசன் பதினான்காம் லூயியின் காலத்தில் பிரான்சு அரசியலில் உலகின் முதல் வல்லரசாயிருந்தது போலவே