பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

189

வாய்ந்ததேயாயினும் கிரேக்க இலக்கியப் பழைமைக்கு ஒத்த பழைமையுடைய நூல்கள் கிட்டாத நிலையில் தமிழ் கிரேக்க மொழியுடன் பழைமை வகையில் போட்டியிட முடியாத நிலையை உடையதே.

கிரேக்கநாடு அளவில் தமிழ் நாட்டின் அளவேயாகும். தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மண்டலங்களும், அதன் வடக்கே தொண்டை மண்டலமும் அமைந்தது போலக் கிரேக்க நாடும் தொன்று தொட்டு இயோலியம், அயோனியம் (இதுவே தமிழில் யவனர் எனத் திரிந்து கிரேக்கரைக் குறித்தது), டோரியம் என முப்பகுப்புடையதாயிருந்தது. அதன் வடக்கில் திரேஸியா, பிரிஜியா முதலிய அரைக் கிரேக்கப் பகுதிகள் இருந்தன. கிரேக்கர்கள் தங்களை ஹெல்லனியர் என்றும் தம் நாட்டை ஹெல்லாஸ் என்றும் கூறினர்.

மொழியின் தன்மை

கிரேக்க மொழி ஆரிய இன மொழிகளுள் ஒன்று. ஆரிய முதன் மொழியின் மெய்யெழுத்துப் பெருக்கத்தை வடமொழி பேணிற்று. கிரேக்க மொழியோ அதன் உயிரெழுத்துப் பெருக் கத்தைப் பேணிற்று. ஆகவே, உலகின் எல்லா மொழிகளிலும் வடமொழி மிகுதி மெய் எழுத்து உடையதாயிருப்பதுபோல் கிரேக்கமொழி மிகுதி உயிரெழுத்துக்களை உடையதா யிருக்கிறது. இம் மிகுதி பெரிதும் ஈருயிர் கலந்த இணையுயிர் களால் ஏற்பட்டது. தமிழிலும் வடமொழியிலும் ஐ (அஇ) ஒள (அஉ) என்ற இரண்டு இணைஉயிர்களே இருக்கின்றன. கிரேக்க மொழியில் இவை தவிர ஆஇ, ஆஉ, எஇ, ஏ ,எஉ, ஏஉ, ஒஇ, ஓஇ, ஒஉ, ஓஉ முதலிய இணையுயிர்கள் உண்டு.

வடமொழியினும் பரந்த வினைத்திரிபுகள் (காலம், பண்பு குறித்த மாற்றங்கள்; முற்று, எச்சம், வியங்கோள் போன்றவை) கிரேக்க மொழியில் உண்டு.

டமொழியும் தமிழ்மொழியும் புலவர்களால் திருத்த மடைந்தது போலக் கிரேக்க மொழியும் மிகப் பழங்காலத் திலேயே திருத்தமடைந்து இலக்கியப் பண்பாடு பெற்றது.எனவே, பண்டைய மொழிகளுடன் ஒப்பிட்டால்கூட கிரேக்கமொழி திட்பமும் நயமும் உடையதாயிருக்கின்றது.