உலக இலக்கியங்கள்
[201
முறையில் முதலி ரண்டுமே அதன் இலக்கிய இளமைக் காலத்தை உணர உதவுவன.
பழைய ஜெர்மன் 8 ஆம் நூற்றாண்டு முதல் கிட்டத்தட்ட 1050 வரை நிலவிய மொழி நிலையையும், இடைக்கால ஜெர்மன் 1350 வரை இருந்த நிலையையும் குறிக்கும் இக் காலங்களில் எழுதா வழக்காகப் பாடப்பட்டு வந்த சில நாடோடிப் பாடல்களும்2 நாட்டுப்புறப் பாடல்களும்3 பைபிள் கதைகள், கிறித்தவ சமயத் தொண்டர் வரலாறுகள் ஆகியவைகளுமே இலக்கியமா யமைந்தன. பிரஞ்சு, ஆங்கில இலக்கிய வழக்கைப் பின்பற்றி ஆர்தர் கதைத் தொகுதியைச் சேர்ந்த கதைப் பாடல்களும், பிரஞ்சு வழக்கைத் தழுவி நகைச்சுவையும் வசையும் வாய்ந்த 'ரேனார்ட் ஃபுக்ஸ்' போன்ற செய்யுள் நூல்களும் இவற்றைத் தொடர்ந்து எழுந்தன. 11 ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்து ஸாகாக்களையும் ஜெர்மனியிலேயே வழங்கிய அவற்றை ஒட்டிய கதைகளையும் இணைத்து நீப்யூங் கென்லீட்4 என்ற வீரகாவியம் ஒன்று எழுதப்பட்டது. இந்தியாவில் பாரதம் போன்று இது ஜெர்மனியரின் நாட்டுப் பழங்காவியமா யிலங்குகின்றது.
6
இடைக்காலத்திலேயே வேரூன்றிய இன்னோர் இலக்கி யத்துறை கவிஞன் உணர்ச்சிகளை வெளிப்படக் கூறும் உணர்ச்சிப் பாடல்கள்5 ஆகும். இத் துறைப் பாடலுக்கு ஜெர்மானியர் 'சிறுபாக்கள்”“ என்ற அழகிய பெயர் தந்துள்ளனர். இத் துறையில் சிறந்த கவிஞர் வால்ட்டர் இயற்றிய சிறுபாக்கள், காதலின் இன்பதுன்ப நிலைகள், நாட்டுப்பற்று, சமயம், அரசியல் ஆகிய எல்லாவற்றையும் பொருளாகக் கொண்டவை.
தற்கால இலக்கியத் தோற்றம்
10
ஜெர்மனியின் தற்கால இலக்கிய வளர்ச்சியை ஆறு கூறுகளாகப் பிரிக்கலாம். அவை முதிராப் பருவ மாறுபாட்டுக் காலம்° 1350-1600, மறுமலர்ச்சிக் காலம் 1600-1740, புயல்- எதிர்ப்புயல் காலம் 1740-1832, செவ்வியல் காலம்", முனைப்பியல் காலம்2, அண்மைக் காலம் என்பவை. புது ஜெர்மன் பிறப்புக் காலமாகிய மாறுபாட்டுக் காலம் இடைக்கால ஜெர்மன் இலக்கி யத்தின் சிறப்புக்கள்கூட அழிவுற்ற நிலையிலேயே தொடங்கிற்று. சிறுபாக்கள் உணர்ச்சியற்று வெறும் விரிவுரைகள்13 ஆயின.