உலக இலக்கியங்கள்
[221
நூல்களிலிருந்து பாரிய தொகுப்புகள் உண்டு பண்ணுவதே புலமைக்கு அறிகுறியாக இக் காலத்தில் எண்ணப்பட்டது.
ப் பகுதியின் தலைசிறந்த எழுத்தாளர் வங்-சூ ஆவர். இவர் அக் காலத்துக் கண்மூடிப் பழக்க வழக்கங்களைப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராய்ந்து கண்டித்தார். புத்த நெறி சார்ந்தவருள் தலைசிறந்த எழுத்தாளர் பாஃசியென் என்ற சீன புத்தத் துறவி. இவர் வடஇந்தியா வெங்கும் பயணம் செய்து குப்தர் காலத்திய இந்தியாவின் சமய அரசியல் நிலைகளை எடுத்துக் கூறினார். இவர் சிறந்த இலக்கிய எழுத்தாளராயினும் சமயப்பற்றுக் காரணமாகச் சமய அருஞ்செயல்களையும் புனைகதை களையும் அப்படியே வரலாறாக மாற்றியவர். புத்தநெறியின் அடுத்த புகழ்மிக்க சீன எழுத்தாளர் குமாரஜீவர் என்ற இந்தியப் புலவர். இவர் சீனத்தில் குடியேறிச் சின மொழி பயின்று சீனப் புலவர் உதவியுடன் புத்தசமய நூல்களைச் சீனத்தில் மொழிபெயர்த்தார். சீன மக்களிடையே ஒரு 'குட்டிப் புத்தரா'கக் கருதப்பட்ட பெருமையை உடையவர் இவர்.
இக் காலச் செய்யுள்நடை ஐந்து அல்லது ஆறு (நேர்) அசைகளையுடைய அடிகளாலானது. கவிஞர்கள் இயற்கை அழகை உணர்ச்சியுடனும் நயத்துடனும் சித்திரித்தனர். தாய்நாட்டினின்றும் தொலைசென்றவன் தாய்நாட்டைப் பற்றி எண்ணி ஏங்குதல், இளவேனிலையும், கதிரொளியையும் எதிர்பார்த் திருக்கும் அவா ஆகியவை கனிவுடன் பாட்டில் தீட்டப்பெற்றன.
8. இடைக்காலம் (கி.பி. 600-1200)
கி.பி. 600 முதல் 900 வரையுள்ள 'தாங்' மரபினர் காலமே சீனக்கவிதை உச்சநிலை எய்திய காலமாகும். பாட்டின் உருவிலும் பொருளிலும் இக் காலத்தில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டன. 4 அல்லது 5 அசை அடிகளுக்கு மாறாக 7 அசை அடிகள் எழுந்தன. பாடல்களுள் ‘பிறந்த பொன்னாட்டார்வம்' முன்னிலும் உள்ளுண ர்ச்சியுடன் பாடப்பட்டது. அத்துடன் பாரசீகக் கவிதையை நினைவூட்டும் தீந்தேறல் (மது) பாட்டுக்கள் சின இலக்கியத்தில் புத்தம் புதிதாகத் தோற்றமெடுத்தன. நாட்டுப்பற்றுப் பாடல் கவிஞர்களில் சிறந்தவர் 'என் எளிய