(244) ||.
பொற்கால இலக்கியமேயாகும். டால்ஸ்டாயும், டாஸ்டா
பொற்றூண்கள் போல்வர்.
ல்
அப்பாத்துரையம் - 44
இக்
கோபுரத்திற்கு
யெவ்ஸ்கியும்52 இருபெரும்
டால்ஸ்டாயின் இலக்கியம் ரஷ்ய இலக்கியத்துள்ளும் ஒரு தனி இலக்கியமென்னத்தக்கது. அவர் வாழ்வு நீட்சி, நூற் பெருக்கம், பற்பல மாறுபாடுகள், எல்லையற்ற உலகச் செல்வாக்கு, கலையு லகில் அவர் நாட்டிய உயர்வு. அறிவுலகை அவர் கலக்கிய கலக்கு ஆகிய யாவும் ஒரு தனி வரலாற்றுக்கே உரியவை.
டால்ஸ்டாயின் இலக்கியம் ரஷ்யா உலகுக்கத் தந்த செல்வம். ஆனால், ரஷ்யாவுக்கு அவர் வாழ்க்கையும் கோட்பாடுகளும் ஒரு புதிர். செல்வர் மனையிற் பிறந்து செல்வர் மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் விடமுடியாத அவர் புறத்தும் அகத்தும் அவற்றை எதிர்த்துப் போராடினார். இப் போராட்டத்தில் கலையும் தப்ப வில்லை. கலைஞரும் தப்பவில்லை. கலைஞரும் இலக்கிய மன்னருமாகிய அவர் கலையையும் இலக்கியத்தையுங் கூட வேம்பென வெறுத்தார். ஆனால், வாழ்வை வெறுப்பவரும் வாழ்வை விட முடியாதது போலவே நல்ல காலமாக வெறுத்த கலையையும் அவர் விடமுடியவில்லை. அவர் கலைவெறுப்பால் உண்மையில் நிகழ்ந்தது யாதெனில் கலையின் போலியுருவனைத்தும் போய் உள்ளார்ந்த உயர் கலையொளி ஏற்பட்டதேயன்றி வேறன்று.
டால்ஸ்டாயின் கோட்பாடுகள் பிற்றைய நூற்றாண்டுகள் வரை பரந்து கார்லைல், ரஸ்கின், வெல்ஸ், ரோமன் ரோலண்டு, காந்தியடிகள் போன்ற, ‘ஆவிப் புரட்சியாளரை’ புதுமை அவாவும் பழமைப் பிணிப்பும் கொண்ட மாண்புடைப் பெரியாரை இயக்கின. ஆனால், அவர் 'இமாலயத் தோல்வியுற்ற’ குறையுடன் அவர் அறிவுச் செல்வத்துக்கும் உரியவராக வந்த அவர்களிடையே எவரும் அவர் எல்லையற்ற கலை யகலத்தையும் உயர்வையும் சிறிதளவும் எட்டமுடியவில்லை என்று கூறலாம்.
டால்ஸ்டாய் (1828-1910) எழுதிய நூல்கள் பல; பலவகைப் பட்டவை; பல கொள்கைகளும் கோட்பாடுகளும் கொண்டவை. ஆனால், அவை தன் வாழ்க்கையின் வரலாறுகளேயாகும். அவற்றின் பரப்பும் மாறுபாடுகளும் வளர்ச்சியும் உண்மையில்