உலக இலக்கியங்கள்
267
கருத்துக்கள் கலையுருவில் நாட்டுப் பழங்கதைகளாக எழுந்தன. பாரசீகப் பெருங்காப்பிய மாகிய ‘ஷாநமா' இப்பழங்கதையின் புது வடிவமேயாகும்.
4. மொழிப்பரப்பும் இலக்கியப்பரப்பும்
வடஇந்திய இலக்கிய வரலாறு முற்றிலும் ஒரு மொழி வரலாறாயிராமல் பழைய வேதமொழி, புத்த சமணகாலப் பாள பாகத மொழிகள், இடைக்கால வடமொழி பிற்கால இந்தி வங்காள முதலிய மொழிகள் ஆகிய நான்கு தலைமுறை மொழிகளில் அமைந்திருக்கிறது. அதுபோலப் பாரசீக இலக்கிய வரலாறும், பழம்பாரசீகமொழி (ஈரானி), முற்காலப் பாரசீகம் (ஐந்து), தற்காலப் பாரசீகம் என மூன்று தலைமுறை மொழிகளில் அமைந்துள்ளது. இவற்றுள் தற்காலப் பாரசீக இலக்கியம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி குன்றிற்று. இந்தியாவில் மொகலாயர் ஆட்சிக் காலங்களில் அது அரசியல் மொழியாகவும் கலைமொழி யாகவும் இருந்தது. எனவே, இந்தியாவில் அது பின்னும் இரண்டு நூற்றாண்டுகள் வாழ்வு பெற்றது; (16-17 ஆம் நூற்றாண்டுகள்).
பாரசீக இலக்கிய உலகின் விண்மீன்கள் எண்ணற்றவை யாயினும் அவர்களுள் தலைசிறந்தவராக ஏழு பேர் ஏழு கலை மணிகள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர். அவர்களுள் நாட்டுப் பெருங்காப்பியத்துறையில் ருதகியும் பிர்தாஸியும்; புனைவுக் கதையில் நிஜாமியும், மறைநிலைப் பாடலில் ரூமியும்; ஒழுக்கமுறை இலக்கியத்தில் ஸாதியும்; உணர்ச்சிக் கவிதையில் ஹபீஸும்; எல்லாத் துறைகளிலும் ஜாமியும் ஈடற்ற சிறப்புடையவர் எனப் பாரசீகரால் போற்றப்படுகின்றனர்.
பாரசீக இலக்கிய வளர்ச்சியை நான்கு படிகளாக வகுக்கலாம். முதலாவது இஸ்லாமியத் தோற்ற முதல் கஜினி முகமது ஆட்சி வரை (8-10 நூற்றாண்டுகள்); இரண்டாவது ஸெல்யூக் மரபினர் ஆட்சிக் காலம்; மூன்றாவது மங்கோலியர் படையெடுப்பும் ஆட்சியும் ஏற்பட்ட காலம்; நான்காவது அண்மைக்காலமும் இந்திய முகலாயர் ஆட்சிக்காலமும்.
தபாரி என்ற வரலாற்றிஞர்; இபன்குர்தாத்பிஃ என்ற நில நூலறிஞர்; அவிஸென்னா என்று மேனாட்டினர் வழங்கும் பேர்