பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8. கன்னட இலக்கியம்

1. முன்னுரை

இந்திய மொழிகளுள் தமிழுக்கும் வடமொழிக்கும் அடுத்த படி பழமையான இலக்கியமுடையது கன்னடமே.

கன்னடம் திராவிட மொழிக்குழுவைச் சேர்ந்தது. பண்பட்டதிராவிட மொழிகளாகிய தென்இந்திய மொழிகளுள் பழமையிலும், இலக்கியப் பரப்பிலும் அது தமிழுக்கு அடுத்தபடி யானது. நாட்டுப் பரப்பிலும் மக்கள் தொகையிலும், அது தமிழ், தெலுங்கு ஆகிய வற்றுக்கு அடுத்த மூன்றாம் இடம் உடையது.

கன்னடம் என்பது கர்நாடகம் என்ற தொடரின் சிதைவு ஆகும். வடமொழியில் அது ‘கர்நாடகம்' என்றே குறிப்பிடப் படுகிறது.

கன்னடம் பேசும் மக்கள் தொகை ஒரு கோடி மைசூர்த் தனியரசு, ஹைதராபாத் தனியரசின் மேல் பகுதி, பம்பாய் மாவட் டத்தின் ‘தென் மராட்ட ‘வட்டங்கள், சென்னை மாவட்டத்தின் தென் கன்னட, பெல்லாரி வட்டங்கள் ஆகியவை கன்னட நாட்டை’ச் சேர்ந்தவை.

2. கன்னட நாட்டில் பிறமொழியகத் தொடர்புகள்

கன்னட நாட்டு வரலாறு, மொழி, இலக்கியம், சமயம் ஆகியவற்றில் தெலுங்குநாடு, தமிழ்நாடு ஆகிய இரு பகுதிகளின் தொடர்புகள் பல. தென்மொழிக் குழுவுக்கே சிறப்பான எழுத்து க்களுள் வல்லின றகரம் அண்மைவரை தெலுங்கிலும் கன்னடத் திலும் இருந்தது. ழகரம் அண்மை வரை கன்னடத்திலிருந்தது. தவிர,13ஆம் நூற்றாண்டு வரை தெலுங் கெழுத்துக்களின் உருவம் கன்னட எழுத்துக்களின் உருவினின்று வேறுபடாமல் ஒரு தன்ன னமை யதாகவே இருந்தது.