பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(284) ||

அப்பாத்துரையம் - 44

பிரமோத்தர காண்டமும் மைசூர்த் தளவாய் மரபினரான நஞ்சராசரால் சிவபத்தி மகாத் மியமும் எழுதப்பட்டன.

மக்கள் சமயத்திலும் வாழ்வியவிலும் பகுத்தறிவுச் சீர்திருத்த ஒளி ஊட்டிய கவிஞர் சர்வக்ஞமூர்த்தி ஆவர். இவர் பாடல்கள் தமிழில் சிவவாக்கியர் பாடல்களையும் தெலுங்கில் வேமனர் பாடல்களையும் நினைவூட்டுபவை. பாடல்தோறும் இவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் முச்சீர் மணிகளில் மூன்றின் கருத்து கீழே தமிழ்வடிவில் தரப்படுகிறது.

பறையன்மனை புகும்கதிரோன் ஒளிதீ தாகிப் பறையொளியாய் மாறிடுமோ? பறையனென்றும் மறையவனென்றும் பேதமே எவர்க்கும் இறையருளுண்டேல் உயர்வுண்டாம் சர்வக்ஞ.

நடமாடித் திரியும் தாய்நிலமும் ஒன்றே; விடாய்தீர்க்கும் நீர் ஒன்றே; வீட்டினுள்ளே

1

அடுப்பதனில் எரிதழலும் ஒருதன்மைத்தே;

எடுப்பதெங்கே குலம் சாதி காண்! சர்வக்ஞ.

பன்றியாய்ப் பிறந்திட்டான் பெருமாள்; ஈசன் சென்றிரந்தான் மனைதோறும்; விதியின் தாதை அன்றிழந்தான் தலையொன்றை; இவர்கட்கெல்லாம் அன்றெழுதி விட்டவன் யார்? காண்! சர்வக்ஞ.

7. தற்கால இலக்கியம்

2

M

தற்கால இலக்கியத்தில் பெரும்பகுதி உரைநடையும் நாடகமும் புனைகதையும் ஆகிய புத்திலக்கியத் துறைகளேயாகும். இவை நாட்டிலக்கிய மாகாவிடினும், புதிய நாட்டிலக்கியம் உருவாக உதவுபவையே என்பதில் ஐயமில்லை.

ஆங்கிலத்தினின்று ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவும் வங்கத்தின் தற்காலப் புனைகதை3 நூல்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மைசூர் அரசர் கிருஷ்ணராய உடையார் காலத்தில் (1799-1868) அவர் ஆதரவிலேயே 'கிருஷ்ணராய வாணிவிலாசம்' என்ற பெயருடன் உரைநடைப் பாரத நூல் மொழிபெயர்க்கப்