பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

(301

முதலிய மொழிகளுடன் தெலுங்கை இணைத் தாராய்ந்து திராவிட ஒப்பியல் மொழியாராய்ச்சி செய்துள்ளனர். டாக்டர் ஸி.ஆர். ரெட்டியின் 'கவிதத்வ விசாரமு' கவிதையின் பண்பு பற்றிய ஆராய்ச்சியாகும்.

பெயரளவில் தெலுங்கில் ஒன்றிரண்டு நாடகங்களும் தென்புல இலக்கியத்தில் ஒருசில நாடகங்களும் இருந்தன வாயினும் வடமொழி, ஆங்கில மொழிகளைப் போன்ற நாடக வளம் இக் காலத்திலேயே ஏற்பட்டு வருகிறது. பழைய புராணக் கதைகளின் அடிப்படையில் சாகுந்தலம், நாகார விஜயம், மல்லிகா மாருதம், வேணி சம்ஹாராம், விக்கிரமோர்வ சீயம் முதலியவை எழுதப் பட்டன. இத் துறையில் வேதம் வெங்கடராய சாஸ்திரியின் நாடகங்களும், கிருட்டிணமாச் சார்லுவின் சித்ரநளீயமும் சிறப்பு வாய்ந்தவை. வீரேசலிங்கம் பந்துலு, லட்சுமிநரசிம்மம் ஆகியவர் கள் சமூகச் சீர்திருத்தத்தில் முனைந்து சீர்திருத்த நாடகங்கள் எழுதினர். குருஜாத அப்பாராவின் கன்யா கல்கம் இவ்வகைப்பட்ட சிறந்த நாடகம்.

வரலாற்று நாடகங்களுள், மூ.க. சீனிவாசராவின் பிரிதிவி

ராஜன், விஜயநகர வீழ்ச்சி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. ரோஷனாரா, பிரதா பருத்ரா ஆகியவையும் இத் திறத்தவை. ஷேக்ஸ்பியர் நாடகங்களை வீரேசலிங்கம் மொழிபெயர்த் துள்ளார்.

புனை கதைத்துறை (நாவல்) புத்தம் புதிது. பங்கிம், ரோமெஷ் ஆகியவர்களின் வங்கப் புனைகதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆங்கிலப் புனைகதை' தழுவி வீரேசலிங்கம் எழுதிய நூல் ராஜசேகர சரித்திரம் ஆகும்.

வசை நூல்களில் ஜக்க கவியின் ‘ராவண தோம்மீயமு’வும் நகைச்சுவை நூல்களில் பன்னு கண்டி லட்சுமி நரசிம்மத்தின் 'சாட்சி'யும் குறிப் பிடத்தக்கவை.

வீரேசலிங்கம் நூல்களும் சின்னையாகுசூரி உரைநடை நூல்களும் தற்கால உரைநடைக்கு இலக்காகத்தக்கவை. லட்சுமி நரசிம்ஹராவ், மாடபதி அனுமந்தராவ், அக்கிராஜுஉமாகாந்தர் முதலியோர் சிறுகதை எழுத்தாளர்கள்.