302
அப்பாத்துரையம் - 44
1933இல் பெர்ஹாம்பூரில் நிறுவப்பட்ட நவ்ய சாகித்ய பரிசத், சாகித்ய சமிதி இலக்கியக் கழகங்கள் இல லக்கிய வளர்ச்சியில் முனைந்துள்ளன. புரோதத்தூர் கவிஞரான கதியராம வெங்கட சேசரின் சிவாஜி சரித்திரம் கூறும் சிவபாரதமும், ராணா பிரதாபசிங் சரித்திரமும் கவிதையில் புதுத்துறை வகுத்துள்ளன.
ஆங்கில
இக் காலத்தில் கவிதையியக்கத்துக்கு இலக்கியமும் வங்க இலக்கியமும் புறத்தூண்டுதலாயிருப்பினும் அது உண்மையில் நாட்டின் தேசியச் செல்வமான தேசீ இலக்கியத்தைப் புதுப்பித்து வளப்படுத்தும் முறையிலேயே நாட்டம் செலுத்துகிற தென்னலாம் இலக்கியத்துக்கான பொருளும் இப்போது பொதுமக்கள் வாழ்வாய் வருகின்றது. ராமிரெட்டியின் ‘கிருட்டீவலுடு' உழவர் வாழ்வு பற்றிய பாடல். என் சுப்பாராவின் 'வெங்கிப் பாட்டுக்கள்' எளிய நடையிலும் எளிய உவமையணிகளுடனும் இயற்கை வாழ்வைச்
சித்தரிக்கின்றன.
பிறமொழிப் பண்பாடாகிய காடுகளில் நெடுங்காலம் திரிந்திளைத்த தெலுங்கு இலக்கிய நங்கை, இப்போது தன் நாட்டு வாழ்வையே தாயக மாக்கி அறிவுலகின் முற்போக்கில் சரிசம டங்கொண்டு பங்குகொள்ள முயல்கின்றாள்.
அடிக்குறிப்பு
1. Viear of Wakefield.