பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




304

||-.

அப்பாத்துரையம் - 44

பொருந்துமே யாயினும், இத் தொடர்பு உண்மையில் இவை இரண்டனுக்கு மட்டுமன்றி எல்லா வடஇந்தியா மொழிகளுக்குமே உரியதாகும். இவையனைத் தின் வரலாற்றையும் இக் காரணத்தை முன்னிட்டுக் கோவைப் படுத்துவதானால், அது வடநாட்டு மொழிகளின் வரலாறு ஆகுமேயன்றி வடமொழி வரலாறு ஆகதென்னலாம்.

பண்டை மொழியாராய்ச்சி, சமய ஒப்புமையாராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுமே வேதமொழி பெரிதும் பயனுடையது. இலக்கியச் சுவைஞருக்கு இலக்கிய மொழியாகிய சமற்கிருதமே பயனுடையதாகும்.

3. வடஇந்தியத் தாய்மொழி வாழ்வுகளும் வடமொழி வாழ்வும்

வடமொழி இன்று பேசப்படும் மொழியன்று. அதன் இலக்கிய வாழ்வும் ஓய்ந்துவிட்டது. ஆனால் இலக்கிய வாழ்வு இருந்த காலத்திலும் கூட அது பேசப்பட்டதாகத் தெரியவில்லை. உலகில் புலவர் நாவில் ஊடாடியதன்றிப் பொதுமக்கள் நாவில் என்றும் எத்தேசத்தும் நடமாடாத மொழி வடமொழி ஒன்றே என்னலாம். அதனை இக் காரணம் கொண்டே தேவமொழி என அழைத்தனர்.

வேதமொழியும் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கிறந்த நூல்வழக்கு மொழியாயினும் அது பின்னதைப் போன்ற செயற்கை இலக்கிய மொழியன்று. அது உண்மையில் கி.மு.1500 லிருந்து 800 வரை இந்திய ஆரியர் பஞ்சாபில் வாழ்ந்த காலத்தில் பேசிவந்த மொழியேயாகும். அவர்கள் கிழக்கே குருபாஞ்சால நாட்டிற்குப் பரவுவதற்குள் (கி.மு. 800 - 200) நூல்வழக்கு மொழியிலிருந்து பேச்சுமொழி நெடுந்தூரம் விலகிற்று. நூல்வழக்கு மொழி வேத மொழி யென்றும் பேச்சு வழக்கு மொழி ‘பாஷா' என்றும் வழங்கின. மொழியறிஞரால் இது, 'பிற்கால வேத மொழி' எனப்படும் உபநிபடதங்கள் இதிகாச புராணங்கள் இதிலேயே இயற்றப் பட்டன. இவற்றினிடையே வேதமொழிக்குப் பாசுகராலும் பிற்கால வேதமொழிக்குப் (பாஷா) பாணினியாலும் இலக்கணம் வகுக்கப்பட்டது.