16
அப்பாத்துரையம் - 44
வேண்டும், அல்லது கைகட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளிருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது.”
ப்பிரச்சனையை மார்க்ஸ் புதிய வகையில் விளக்கிக் கூறுகிறார். தொழிலாளிகள் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் உழைப்போம் என்று வரையறுப்பதாக வைத்துக் கொள்வோம். இவ்வரையறைப்படி இந்நேரத்தில் அவர்கள் செய்யும் வேலையின் மதிப்பு அவர்கள் பெறும் கூலிக்குச் சமமாயிருக்க வேண்டும். இங்ஙனம் வரையறுக்கப்படும் நேரத்தை மார்க்ஸ் ன்றியமையா உழைப்பு நேரம்" (Necessary Labour Time) என்று குறிப்பிட்டார். இதுபோக மிகுதி யுழைத்தால் அந்நேர உழைப்பும் அதன் பயனும் முதலாளிகளால் சுரண்டப்படும் சுரண்டலின் அளவு ஆகும். இச்சுரண்டலின் மதிப்பை அவர் 'மிகுதி உழைப்பு மதிப்பு' (Surplus Value) என்கிறார்.
66
ம்
சுரண்டலை மதிப்பிடும் 'இம் மிகுதி உழைப்பு மதிப்'பிலிருந்தே ஆதாயம், வட்டி, தரகர் கழிவுத் தொகைகள் (Middlemens's Commissions) ஆகியவை எல்லாம் எழுகின்றன. இம்மிகுதிச் செல்வம் தொழிலுற்பத்தியாளராலும் உற்பத்திக் கருவிகளின் ஏக போக முறையாளர்களாலும் கைப்பற்றிக் கொள்ளப்படுகிறது..... முதலாளித்துவ வர்த்தகமாகிய சதுரங்க ஆட்டமானது மேற்குறிப்பிட்ட பங்கு கொள்ளும் இனங்கள் தமக்கு முடியுமளவு பெரும் பகுதியைக் கைக்கொள்ளச் செய்யும் முயற்சியேயன்றி வேறன்று. முதலாளித்துவத் துறையில் போட்டி போட்டி என்று கூறப்படுவதன் முழு மறைபொருள் இதுவே. பல்கலைக் கழகங்களில் பெருமுயற்சியுடன் கற்றுத் தரப்படும் பொருளியலின் மயிரிழை நுட்பங்களும் சிக்கல்களும் இவ்வொன்றைப் பற்றியதே. பொது உடைமை விளம்பர அறிவிப்பின் மொழியில் கூறுவதானால் இன்ப வகுப்பினர் செய்யும் பெருங் கொடுமை சுரண்டலே-வெட்கமற்ற, நேரடியான, விலங்குத் தன்மை வாய்ந்த, வெளிப்படையான சுரண்டலே.
காலப்பாதையில் முதலாளித்துவம் முன்னேறிச் செல்லுந்தோறும் சுரண்டலின் அளவும் வளர்ந்து கொண்டே தான் போக முடியும். ஏனென்றால், முதலாளித்துவத்தின் உயிர்நாடியான பண்பு போட்டியேயாகும். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியாளர் பலர். இவர்களனைவருமே விற்பனைக் களத்தைத் தாமே கைப்பற்றவும் தாமே ஆதாயம் பெறவும் முயற்சி