பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(322) ||

அப்பாத்துரையம் - 44

யசஸ்திலகசம்பூ அல்லது யசோதர மகாராச சரிதம், 11ஆம் நூற்றாண்டினரான ஸோட் டலரின் அவந்தி சுந்தரீகதா ஆகியவை இத் திறத்தவை. இத் துறை யிலக்கியத்தின் தலைசிறந்த நூல் போசன் என்ற அரசன் இயற்றிய இராமாயண சம்பூவேயாகும். இது தென்னாட்டில் போச சம்பூ என்ற பெயரால் சம்பூ இலக்கியத்தின் முன்மாதிரியாக வழங்குகிறது. வேதாந்த தேசிகர் விச்வகுணாதர்ச சம்பூ என ஒரு சம்பபூ காவியமும் இயற்றியதாக அறிகிறோம்.

27. நலிவுக்காலம் (12ஆம் நூற்றாண்டுக்குப் பின்)

இராமானுசரின் வைணவ இயக்கம் தமிழகத்திலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் பரவிற்று. அதன் பயனாகத் தாய்மொழி யிலக்கியம் எங்கும் தலைதூக்கிற்று. வடமொழியி லக்கிய வாழ்வுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாயிற்று. இதனை யுணர்ந்த இராமானுசர் சீடரான வேதாந்த தேசிகர் வடகலை தோற்றுவித்து வடமொழிக்குப் புத்துயிர் தர முயன்றாராயினும், அதனாலும், புத்திலக்கிய வளர்ச்சி ஏற்படவில்லை. தாய்மொழிக் கவிஞர்களே தம் புகழ்பரப்ப வடமொழியிலும் சில நூல்கள் எழுதலாயினர். இதுவும் வரவரக் குறைந்தது. 13 ஆம் நூற்றாண்டுடன் வடநாட்டிலும், 16 ஆம் நூற்றாண்டுடன் தமிழகத்துக்கு வெளியே தென்னாட்டிலும், 18 18 ஆம் நூற்றாண்டுடன் தமிழகத்திலும் வட மொழி இலக்கிய வாழ்வு ஓய்வுற்றது.

28. பிற்காலக் கதையிலக்கியம்

நலிவுக் காலத்திலும் ஓரளவு வளர்ச்சியடைந்ததெனக் கூறத்தக்க இலக்கியம் தாய்மொழி யிலக்கியத்திலிருந்து வடமொழிக்கு மிகப்பிந்தி வந்த கதைத்துறையே. ‘பெருங்கதை’ இலக்கியத்தின் கதைகளைச் சுருக்கியும் விரித்தும் இலக்கிய நயம்படப் பல புதுக்கதைகள் நாளடைவில் எழுந்தன. கி.பி.11 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே கிளி எழுபது (சுகசப்ததி) வழங்கி யிருந்ததாக, அறிகிறோம். இந்தியாவிலிருந்து பாரசீகம் சென்ற இக்கதை மீண்டும் ‘உருது’, ‘இந்தி' முதலிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக மொழிகளிலும் பரவிற்று. இதனைப்