பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. பின்னுரை

ஒரு முறையின் குறைபாடுகளை எடுத்துரைப்பதே அதனைப் பழிக்கப் போதுமானது. ஆனால், அம்முறையை வேரோடு இலை தழை கொப்பு ஒன்றும் விடாமல் அகற்றி விடவேண்டும் என்ற உறுதியுடையவர்களின் வேலை அத்துடன் நின்றுவிடாது.அவர்கள் அகற்றி ஒழிக்க எண்ணும் முறையைவிட நல்ல திட்டமொன்றையும் உருவாக்க வேண்டும்.

பல மாற்று முறைகள் தரப்பட்டுள்ளன. ஆனால், கும்பல் கும்பலாகத் தரப்படும் மாற்று முறைகளிடையே ஒருவர் முடிவான ஒரு தீர்மானத்திற்கு வருவது அரிது.தரப்பட்ட மாற்று முறைகளான சமதர்மம், பொது உடைமை, மாற்றுடைமை (Syndicalism) சங்க சமதர்மம் (Guild Socialism) முதலிய பலவற்றினிடையேயும் புகுந்து சுற்றித் தேர்வு செய்ய எவ்வளவோ காலமும் பொறுமையும் அழ்ந்த ஆராய்ச்சியும் சமநிலை மனமும் வேண்டும்.

இப்பகுதி ஆராய்ச்சி இச்சிறு நூலிலடங்குவதன்றாதலால் அதனை வேறு தனி நூலுக்குரியதாகவிட்டு வைப்போம்.

முற்றிலும் புறக்கணித்துவிட முடியாத இன்னொரு கேள்வி இவ்விடத்தில் எழக்கூடும். முதலாளித்துவ மதத்தின் புரோகித ஆட்சியாளர் இக்குறைபாடுகளை உணர்ந்துள்ளனரா? உள்ளனரானால் அவற்றை அகற்ற அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள் எவை? அவற்றின் பலன் யாது?

இதற்கு விடையாகக் கூறப்படுவது யாதெனில் முதலாளித்துவ இயந்திரத்தின் உயிர்நிலையே திடுமென மூச்சடைத்து நின்றுவிட்டதாலும்: மிகக் கவலைக் கிடமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீண்டகால விளைவுகள் அதன் பயனால் ஏற்பட்டுள்ளதனாலும்; கடைசியாக சமதர்மிகள் அதனை உரத்த