பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அப்பாத்துரையம் - 44

குரலுடன் எதிர்த்து நின்று முழுமையும் கண்டித்துவிட்ட தனாலும், முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள்கூட அம்முறை யிலுள்ள பெருங்குறைபாடுகளை நன்கு கண்டுகொண்டனர். கட்டுப்பாடு, திட்டமமைத்தல் ஆகிய முறைகளின் மூலம் அக்குறைபாடுகளை அகற்றவும் அவர்கள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். ஆனால், இம்முயற்சிகளனைத்தும் ஆவியாய் புகைந்துபோயின இதுவகையில் ஜி.டி.எச். கோலினுடைய ‘பொருளியல் திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள்’ பொருளியல் திட்டம்பற்றிய ஆராய்ச்சிகள்' என்ற நூலின் முடிவுரையிலிருந்து இவ்விடத்துக் கியைந்த சில உரைகளை அப்படியே இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாயிருக்கும். அவர் கூறுவதாவது:-

66

“ஆழ்ந்து ஆராய்ந்தால் நம் முக்கிய படிப்பினையாவது முதலாளித்துவம் இயற்கையிலேயே திட்டமிடும் ஆற்றல் அற்றது. நேர்மாறாக சமதர்மமோ திட்டமிட முடிவது மட்டுமல்ல, திட்டமிட்டே தீர வேண்டியது. முதலாளித்துவத்தின்படி உற்பத்தியை ஒழுங்கமைப்பவர்களின் குறிக்கோள் மக்கள் தேவையை நிறைவேற்றுவதன்று; ஆதாயம் அடைவதேயாகும். ஆகவே கைவசமுள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் முதலாளிகள் கொஞ்ச தூரத்துக்குமேல் செல்லமாட்டார்கள். மேலும்,சாதனங்களை ஈடுபடுத்துவதால் ஆதாயம் குறையு மென்று கண்டால், அவர்கள் அதை நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், சமதர்மிகள் கிடைக்கத்தக்க உழைப்பாளிகள், உற்பத்திக் கருவிகள் முதலிய சாதனங்கள் முழுவதையும் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். தற்போது தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம்மிடமுள்ள சாதனங்களைப் பார்க்கிலும் தேவை எவ்வளவோ எல்லையற்றுப் பெருக்கம் அடையத்தக்கவை. ஆதலால், பயன்படுத்தப்படத்தக்க எத்தகைய சாதனங்களையும் ஈடுபடுத்தாமலிருப்பதென்பது பொருளியல் வளர்ச்சிக்கு மாறானதாகும். இனி, ஓய்வு அல்லது இருக்கின்ற மூலப் பொருள்களே தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானது என்று ஏற்பட்டாலன்றி உற்பத்தி வளர்ச்சிக்கு ஓர் எல்லை காண முடியாது. சமதர்ம முறையில் தொழிலில்லாமை என்பதே