பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. கில்லியட்

கில்லியட், ஸென்ட் ஸாம்ப்ஸன் ஊர் வட்டத்திலேயே வாழ்ந்தான். கெர்ஸ்னித் தீவு முழுவதும், ஆங்கிலக் கடற்கால் வாயிலுள்ள கடற் கால்வாய்த் தீவுகளெங்குமே, அவன் நன்றாக அலைந்து திரிந்து பழகியிருந்தான். ஆனால், கடலும் பாறையும் அவனுடன் பழகினவே தவிர, மக்கள் நன்கு பழகவில்லை. அவன் இருந்த வீடும் அவன் குடும்ப மரபும் இதற்குப் பெரிதும் காரணமாயிருந்தன. அவன் சிறு பிள்ளையாயிருக்கும்போது அவன் தாய் அவ்வூருக்கு வந்தாள். அவன் தந்தையார் என்பது அவனுக்குத் தெரியாது. தாயிடம் கில்லியட் நிறையப் பணம் இருந்தது. சிறு நிலப்பண்ணைகள் இரண்டை அவள் வாங்கினாள். அவள் கைத்திறத்தால் அவை வளமாயின. தவிர, ஸென்ட் ஸாம்ப்ஸன் துறைமுகத்தை அடுத்திருந்த ‘பூதேலா ரூ’ என்ற வீட்டையும் அவள் வாங்கினாள். அது கிட்டத்தட்ட நூறு நூற்றிருபது வெள்ளிக்கே அவளுக்குக் கிடைத்தது.ஏனென்றால் அது பேய் குடியிருந்த வீடு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தகைய வீட்டில் அவள் பிள்ளையுடன் அச்சமின்றிக் குடியிருந்தாள்.பேய் அவளை ஒன்றும் செய்யவில்லை.அதனால் அவளும் ஒரு பேயாயிருக்க வேண்டுமென்று கெர்ஸ்னி மக்கள் தீர்மானித்தனர்!

தாய் இறந்தபின் பிள்ளை தாய்மரபு கெடாமல் தனி வாழ்க்கை வாழ்ந்தது. பேயுறவு அவனையும் விடவில்லை. ஒரே ஒருதடவை சமயகுரு அவன் வீட்டில் சென்றிருந்தார். அவன் அறையில் வால்ட்டேர் எழுதிய நூல் ஒன்று இருந்தது. பேய்க்கும் கத்தோலிக் சமயத்துக்கும் தொடர்பு உண்டு என்று கடற்கால் தீவுகளிலுள்ள மக்கள் கருதியிருந்தனர். ஆனால், வால்ட்டேரோ கத்தோலிக்கரால் கூடப் பேயுடன் நேரடி உறவுடையவர் என்று கருதப்பட்டவர். அத்துடன் கடற்பாசி வகைகள் பற்றிய ஒரு