80
அப்பாத்துரையம் - 44
கண்டது முதல் அவன் முகம் வெளிப்படையாக எப்போதும் போலவே இருந்தாலும், அது ஒரு செயலற்ற திரைபோல், அதன் பின்னுள்ள சுறுசுறுப்பான திட்டங்களை மறைக்க மட்டுமே உதவிற்று.
அவன் துப்பாக்கி செய்யும் கருமானிடம் சென்று “உன்னிடம் சுழல் துப்பாக்கி இருக்கிறதா?” என்று கேட்டான். கருமான் வாளா இருந்தான்.
“சுழல் துப்பாக்கி என்றால் என்ன என்று தெரியுமா?” "தெரியும். அது ஒரு அமெரிக்க ஆயுதம்."
66
“அது கிடைக்குமா?"
"கைத்துப்பாக்கி கிடைக்கும். அது கிடையாது. அது இன்னும் வாணிகச் சரக்காகவும் வரவில்லை. ஃவிரஞ்சுக்காரர் அதை இன்னும் செய்வதில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் தருவித்துத் தரமுடியும்.”
66
“அது ஆறு முறைகள் சுடுவதாயிருக்க வேண்டும்." "சரி"
"மிக நல்ல தரமாயிருக்க வேண்டும்."
"கொடுக்கிற பணம் எவ்வளவு நல்லதோ அந்த அளவு சரக்கின் உறுதிக்கும் நாங்கள் உத்தரவாதிகள்.
“எப்போது வர? எப்போது தருவீர்கள்?”
66
66
“அடுத்த தடவை வரும்போது?”
"ஓஹோ, என்னைத் தெரியும் போலிருக்கிறது, உங்களுக்கு. சரி வாங்கியது நான் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்.”
குளூபினின் அடுத்த தனிப்பட்ட செயல் கப்பல் நடுக்கடல் சென்றபின் தொடங்கிற்று. அப்போது அவனுக்கு ஓய்வு கிட்டிற்று. அவன் தன் கப்பல் உள்ளறைக்குச் சென்று வழிப் போக்கர் பை ஒன்றை எடுத்து அதில் நீண்ட பயணத்துக்குரிய உணவுப் பண்டங்கள், கப்பல் நாழிகை வட்டில், கப்பலோட்டி களின் முடிச்சுகளிட்ட ஏறுவடம் ஆகியவற்றை அதில் வைத்துக்