நூற்சிறப்பு
ஆசிரியர்: ஹெரால்டு ஜோஸஃப் லாஸ்கி முன்னேற்றக் கருத்துடைய ஆங்கில அறிஞரும் எழுத்தாளரும் ஆவர். அவர் பிரிட்டனின் சமதருமக் கட்சியைச் சேர்ந்தவராயினும், அதன் அரசியல் துறையை விட அதன் அறிவாராய்ச்சித் துறையுடனேயே பெரிதும் தொடர்புடையவர். தற்கால அரசியல் நிலைகள் பற்றி அவர் எழுதியுள்ள நூல்கள் மிகப் பல.
லாஸ்கி 1893இல் மாஞ்செஸ்டரில் பிறந்தவர். அவர் மெக்கில் பல்கலைக் கழகத்திலும் இலண்டன் பொருளியல் குழுவிலும் வரலாறு, அரசியல் ஆகியவை பற்றிய பேராசிரியராயிருந்தார். 'பொதுவுடைமை' என்ற நூல் அவரால் 1927இல் எழுதப் பெற்றது.
பொதுவுடைமையைப் பற்றிய பொதுவுடைமை யாளர் கருத்தின் ஆர்வத்துடன் முதலாளித்துவக் கோணத்திலிருந்து காண்பவரின் புறநோக்கும் அவர் நூலில் மிளிர்கின்றது. பொதுவுடைமையின் வரலாறும் விளக்கமும் அறிய விரும்பும் பொது மக்களுக்கு அது பெரிதும் பயன்படுவதாகும்.